இந்தியா

நாளை முதல் ஏப்.29 வரை தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு, நாளை காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்து கணிப்பு நடத்த அல்லது வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமன்றி பலரும் சமூக வலைதளங்களில் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது:

நாளை காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை நடத்தவோ அல்லது வெளியிடவோ தடை விதிக்கப்படுகிறது.

          

மேற்குறிப்பிட்ட இந்தக் காலக்கட்டத்தில் வாக்குக் கணிப்புகளை நடத்துவது, அவற்றை ஊடகங்களில் ஒளிபரப்புவது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 126ஏ-வின் படி விதிமீறலாகும். இந்த விதியை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நாளை (ஏப்ரல் 9) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

SCROLL FOR NEXT