இந்தியா

ஏராளமான சொத்துகளை குவித்த ஒடிசா அரசுப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசாவின் கந்​த​மால் மாவட்​டம், பலிகு​டா​வில் ஒருங்​கிணைந்த பழங்​குடி​யினர் மேம்​பாட்டு முகமை​யில் உதவி செயற்​பொறி​யாள​ராக பணி​யாற்றி வருபவர் வைகுண்ட நாத் பெஹ்​ரா.

இவர் சொத்​துகளை வாங்​கிக் குவித்​துள்​ள​தாக எழுந்த புகார் தொடர்​பாக விசா​ரணை நடத்​து​மாறு மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புவனேஸ்​வர் சிறப்பு நீதி​மன்​றம் உத்​தர​விட்டது. இதையடுத்து புவனேஸ்​வர், பாலசோர், ஜாஜ்பூர் மற்​றும் பலிகுடாவில் பெஹ்​ரா​வுக்கு தொடர்​புடைய 9 இடங்​களில் நேற்று முன்​தினம் ஒரேநேரத்​தில் சோதனை நடை​பெற்​றது. இதில் ரூ.2 கோடி ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இது தொடர்​பாக அதி​காரி​கள் கூறுகை​யில், “இந்த சோதனை​யில் பொறி​யாளர் மற்​றும் அவரது குடும்​பத்​தினருக்கு தொடர்புடையதாக 5 அடுக்​கு​மாடி கட்​டிடங்​களை கண்டறிந்துள்ளோம். இதில் புவனேஸ்​வரில் சுமார் 10,500 சதுர அடி​யில் அமைந்​துள்ள 4 மாடி கட்​டிட​மும் அடங்​கும். மேலும் புவனேஸ்​வர் மற்​றும் ஜாஜ்பூர் மாவட்​டங்​களில் 4 வீடு​கள் மற்​றும் புவனேஸ்​வரின் முக்​கிய இடங்​களில் 7 மனை​கள், ஜாஜ்பூர், பாரிபடா​வில் பல மனை​கள் என மொத்​தம் 13 நிலங்​கள் கண்டறியப்​பட்​டுள்​ளன.

குடும்​பத்​தினரின் வங்கி லாக்​கர்​களில் இருந்து சுமார் ரூ.2 கோடி ரொக்​கம் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளது. மொத்த சொத்​துகளை​யும் மதிப்​பிட்ட பிறகு சட்​டரீ​தியி​லான நடவடிக்கை தொடரும்’’ என்றனர். வைகுண்ட நாத் பெஹ்ரா கடந்த 1999-ம் ஆண்டு இளநிலை பொறி​யாள​ராக ரூ.6,000 மாதச் சம்​பளத்​தில் அரசுப் பணி​யில் சேர்ந்​தார். இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் அவர் உதவி செயற்பொறி​யாள​ராகப்​ பத​வி உயர்​வு பெற்​றார் என்பது குறிப்பிடத்தக்கது​.

SCROLL FOR NEXT