இந்தியா

மாவு அரைவை இயந்திரத்தில் வெடிகுண்டு தயாரித்த மருத்துவர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய காஷ்மீரின் புல்​வ​மாவைச் சேர்ந்த மருத்​து​வர் முஜம்​மில் ஷகீல் கைது செய்​யப்பட்டுள்​ளார்.

ஹரியானா மாநிலம் பரி​தா​பாத்​தில் அவர் வாடகைக்கு தங்​கி​யிருந்த அறை​யில் மாவு அரைவை இயந்​திரத்தை வைத்து வெடிகுண்​டுக்கு தேவை​யான ரசாயன பொருட்​களை தயாரித்து வந்​தது விசா​ரணை​யில் தெரிய​ வந்​துள்​ளது. அங்​கிருந்​து​தான் போலீ​ஸார் 360 கிலோ அமோனி​யம் நைட்​ரேட் மற்​றும் இதர வெடிபொருட்​களை கைப்​பற்​றினர்.

தீவிர​வாத மருத்​து​வர் முஜம்​மில் பயன்​படுத்​திய மாவு அரைவை இயந்​திரம் மற்​றும் இதர மின் சாதனங்​களை ஹரி​யானா பரி​தா​பாத்​தில் உள்ள டாக்ஸி ஓட்​டுநர் ஒரு​வரின் வீட்​டிலிருந்து பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.

SCROLL FOR NEXT