இந்தியா

திருநங்கை மசோதா மனித உரிமைக்கு எதிரானது: திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மக்​களவை​யில் திருநங்​கைகள் தொடர்​பான சட்​டத் திருத்த மசோதா மீதான விவாதத்​தில் தென் சென்னை தொகுதி எம்​.பி.தமிழச்சி தங்​க​பாண்​டியன் பேசி​ய​தாவது: இது சாதாரண சட்​டத் திருத்​தம் அல்ல. மனித உரிமை, மரி​யாதை​யுடன் வாழும் உரிமை மற்​றும் ஒரு சமூகத்​தின் இருப்​பின் மீது எழுப்​பப்​படும் கேள்​வி. ஒரு நபரின் அடை​யாளத்தை அரசு தீர்​மானிக்க முடி​யாது.

இது குறித்து திருநங்கை சமூகத்​தினரின் கருத்​துகள் கேட்கப்படவில்​லை. உச்ச நீதி​மன்​றத்​தின் நல்சா தீர்ப்​பின்​படி, சுய அடை​யாளம் என்​பது தனி நபர் சுதந்​திரத்​துக்​கும் மரி​யாதைக்​கும் அடிப்​படை உரிமை​யானது. இந்த மசோதா அதை மறுக்​கும் வகையில் உள்​ளது. இந்த மசோதா திருநங்கைகளுக்கு பாது​காப்பு அளிப்​ப​தாக அரசு கூறி​னாலும், உண்​மை​யில் அடை​யாளத்தை தாழ்​மைப்​படுத்​தி, அரசின் கண்​காணிப்பை அதி​கரிக்​கும் முயற்சி​யாக உள்​ளது.

          

ஒரு சாதாரண ஆண் அல்​லது பெண் தங்​கள் பாலினத்தை நிரூபிக்க மருத்​து​வச் சான்​றிதழ் அளிக்க வேண்​டிய அவசி​யம் இல்லை. திருநங்கை நபர்​களிடம் தங்​களின் அடை​யாளத்தை மருத்​துவ வாரி​யம் மூலம் நிரூபிக்க வேண்​டும் என்ற நிபந்​தனை தேவை​யில்​லை. இந்த மசோதா திருநங்கை என்ற வரையறையை நீக்​கி​யுள்​ளது. இதில், திருநங்கை பெண்​கள், திருநங்கை ஆண்​கள் போன்ற பலரை தவிர்க்​கும் அபா​யம் உள்​ளது.

புட்​டு​சாமி வழக்​கில் உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பு வழங்​கிய அடிப்படை உரிமைக்கு எதி​ரான​தாக​வும் உள்​ளது. இந்த மசோதா கட்​டாயப்​படுத்​தல், கடத்​தல் போன்ற குற்​றங்​களைத் தடுப்​ப​தாகக் கூறி​னாலும், அது திருநங்​கைகளுக்கு ஆதர​வான அமைப்​பு​களை சந்​தேகப்​படும் வகை​யில் உள்​ளது. எனவே, இந்த மசோ​தாவை திரும்ப பெற வேண்​டும். குறைந்​த​பட்​சம் நா​டாளு​மன்ற நிலைக்​குழு​வுக்கு அனுப்ப வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT