இந்தியா

‘திமாகி’ நக்சல்களை தோற்கடிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

சிஆர்பிஎப் வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

பஸ்தர்: ‘திமாகி’ நக்​சல்​களை தோற்​கடிக்க வேண்​டும் என்று பிரதமர் வலியுறுத்​தினார். பிரதமர் நரேந்​திர மோடி ஆண்டுதோறும் பாது​காப்​புப் படை வீரர்​களு​டன் இணைந்து தீபாவளியை கொண்​டாடி வரு​கிறார். இந்த ஆண்டு சத்​தீஸ்கரின் பஸ்​தர் பகுதி​யில் சிஆர்​பிஎப் வீரர்​களு​டன் இணைந்து அவர் தீபாவளியை கொண்​டாடினார்.

அப்​போது அவர் பேசிய​தாவது: இந்த ஆண்டு தீபாவளி இந்தியாவுக்கு சிறப்​பானது. நாட்​டின் பல்​வேறு மாநிலங்​களில் மாவோயிஸ்ட், நக்​சல் தீவிர​வாதம் ஒழிக்​கப்​பட்டு உள்​ளது. இதற்காக தியாகம், அர்ப்​பணிப்பு உணர்​வுடன் பணி​யாற்​றிய பாது​காப்​புப் படை வீரர்​களுக்கு நன்றி தெரி​விக்​கவே இந்த ஆண்டு பஸ்தரில் சிஆர்​பிஎப் வீரர்​களு​டன் இணைந்து தீபாவளியை கொண்​டாடு​கிறேன்.

ஒரு காலத்​தில் சத்​தீஸ்​கர், பிஹார், ஒடிசா, மகாராஷ்டிரா, உத்​தர பிரதேசம், மத்​திய பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் மாவோயிஸ்ட், நக்​சல் தீவிர​வாதி​களின் ஆதிக்​கம் அதி​க​மாக இருந்​தது. தீவிர​வாதத்​துக்கு எதிரான போரில் சத்​தீஸ்கரில் மட்டும் 1,000-க்​கும் மேற்​பட்ட பாது​காப்​புப் படை வீரர்​கள் உயிரிழந்துள்​ளனர். குறிப்​பாக 2004 முதல் 2013 வரை உயி​ரிழப்பு அதி​க​ம்.

பாஜக அரசு பதவி​யேற்ற பிறகு மாவோயிஸ்ட், நக்​சல் தீவிர​வாதத்துக்கு எதிராக அதிதீவிர நட​வடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன. இதன் காரண​மாக 20 மாநிலங்​களின் 230 மாவட்​டங்​களில் இருந்து மாவோயிஸ்ட், நக்​சல் தீவிர​வாதம் ஒழிக்​கப்​பட்டு உள்​ளது. தீவிரவாதத்​தால் பாதிக்​கப்​பட்​டிருந்த பஸ்​தர் உள்​ளிட்ட மாவட்டங்களில் தற்​போது வளர்ச்​சித் திட்​டப் பணிகள் வேகம் பெற்று உள்ளன.

வனப்​பகுதி​களில் சுற்​றித் திரிந்த ஆயுதமேந்​திய நக்​சல்​கள் ஒழிக்கப்​பட்டு உள்​ளனர். ஆனால் நாட்​டுக்​குள் சுற்​றித் திரியும் ‘திமாகி’ நக்​சல்​கள் (மனதளவில் நக்​சல்) நாட்​டின் ஜனநாயகத்தை சீர்​குலைக்க தீவிர முயற்சி செய்து வரு​கின்​றனர். இவர்​கள் பல்வேறு அரசி​யல் கட்​சிகள், அமைப்​பு​களில் ஊடுருவி உள்​ளனர். அவர்களை அடையளம் கண்டு தோற்​கடிக்க வேண்​டும். நமது நாட்டைப் பாது​காக்க வேண்​டும்.

உலக வங்கி அண்​மையில் வெளி​யிட்ட அறிக்​கை​யின்​படி, கடந்த 12 ஆண்​டுகளில் 50 கோடி இந்​தி​யர்​கள் தீவிர வறுமையி​லிருந்து மீண்டு உள்​ளனர். இது வரலாற்​றுச் சிறப்​புமிக்க சாதனை ஆகும். ஜன் தன் வங்​கிக் கணக்​கு​கள், பிரதமரின் வீட்டு வசதித் திட்​டம் உள்​ளிட்ட பல்​வேறு நலத்​திட்​டங்​கள் ஏழை மக்​களின் வாழ்க்கையில் மாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளன. அவர்​களிடம் புதிய தன்னம்பிக்கை உரு​வாகி​யுள்​ளது.

போதைப் பொருள் இல்​லாத இந்​தியா, சுயசார்பு இந்​தியா, வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க வேண்​டும் என்று பல்வேறு இலக்​கு​களை நிர்​ணயித்து உள்​ளோம். இந்த இலக்குகளை எட்ட நாட்டு மக்​கள் அனைவரும் ஒன்​றிணைந்து செயல்​பட வேண்டும். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT