இந்தியா

ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தலில் ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என கடிதம் எழுதி வாக்கு செலுத்தியவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

என். மகேஷ்குமார்

சித்தூர்: ‘என் வாக்கு விற்​பனைக்கு அல்ல’ என, ஆந்திராவில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்​தலில் ஒரு வாக்காளர் ஆயிரம் ரூபாயையும், கடிதத்​தையும் எழுதி வாக்கு பெட்​டி​யில் செலுத்தியதை சித்தூர் மாவட்ட ஆட்சி​யர் வெகு​வாக பாராட்டியுள்ளார்.

ஆந்​திர மாநிலத்​தில், சமீபத்​தில் ஊரக உள்​ளாட்சி தேர்​தல் நடை​பெற்​றது. எம்​பி​டிசி மற்​றும் இஸட் பிடிசி என இரு முக்​கிய பிரதிநிதி​களுக்​கான தேர்​தல் அது. இதில் ஆளும் கூட்​ட​ணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், ஜன​சேனா மற்​றும் பாஜகவுக்​கும், ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் ஒய்.எஸ்.ஆர். காங்​கிரஸ் கட்​சிக்​கும் இடையே பலத்த போட்டி இருந்​தது. இதில், சித்​தூர் அடுத்த பலமனேர் அரசு கலைக்​கல்​லூரி வளாகத்​தில் நடை​பெற்ற வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது, 2 ஐநூறு ரூபாய் நோட்​டுகள் மற்​றும் ஒரு கடிதமும் இருந்​ததை தேர்​தல் அதி​காரி​கள் ஆச்​சரியத்​துடன் பார்த்​தனர்.

அந்​தக் கடிதத்தை பிரித்​துப் படித்​ததில், “ஐயா நீங்​கள் கொடுத்த ரூ.1,000 பணத்தை திரும்ப பெற்​றுக் கொள்​ளுங்​கள். உங்​கள் பணத்தை நீங்​கள் திரும்ப பெற்​றுக் கொள்​வதில் எந்த அவமானமும் இல்லை. பணத்​துக்​காக எனது வாக்கை ஒருபோதும் விற்க மாட்​டேன். நன்றி” என எழுதப்​பட்​டிருந்​தது. பண ஆசைக்கு உட்​படா​மல், தனது ஜனநாயகக் கடமையை ஆற்​றிய அந்த வாக்காளர், தனக்​கென வழங்​கப்​பட்ட பணத்தை வாக்​குப்​பெட்டி மூலமாகவே திருப்பி வழங்கி தக்க பதிலடி கொடுத்​துள்​ளார்.

தேர்​தல் நேரங்​களில் வாக்​காளர்​களுக்கு கட்​சி​யினர் பணம் விநியோகம் செய்​வ​தாக அடிக்​கடி புகார்​கள் வரும் நிலை​யில், இந்த வாக்​காளரின் செயல் சித்​தூர் மாவட்​டம் முழு​வதும் வேகமாக பர​வியது. அனைவரும் அவரைப் பாராட்​டினர். இதனையறிந்த சித்​தூர் மாவட்ட ஆட்சி​யர் சுமித் குமார் அந்த வாக்​காளரின் செயலை பாராட்​டியுள்​ளார். “இது ஜனநாயகத்​தின் மீதான நம்​பிக்​கையையும், தேர்​தல் நேர்​மையையும் வெளிப்படுத்தும் செயலாகும். வாக்​காளரின் நேர்​மையும், ஜனநாயகத்​தின் மீதான மரியாதையையும் இது எடுத்துக்காட்டுகிறது” என ஆட்சி​யர் பாராட்​டியுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT