இந்தியா

நீரிழிவு நோயாளிகள் புகைப்பிடித்தால் உயிரிழப்பு அபாயம் 55% அதிகரிப்பு: சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை

‘தீவிர சிகிச்சை தேவை’

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீரிழிவு நோயாளிகள் புகைப்பிடித்தால் அவர்​களின் உயி​ரிழப்பு அபா​யம் 55 சதவீதம் அதி​கரிப்​ப​தாக​வும், இதற்கு தீவிர சிகிச்சை தேவை என்​றும் சர்​வ​தேச மருத்​துவ நிபுணர்​கள் எச்சரித்துள்​ளனர்.

‘நீரிழிவு நோய் ஆய்வு மற்​றும் மருத்​துவ நடை​முறை’ என்ற இதழில் வெளி​யிடப்​பட்​டுள்ள ஆய்வு கட்​டுரை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: புகைப்​பிடிப்​ப​தால் நீரிழிவு நோயாளி​களுக்கு ஏற்​பாடும் பாதிப்​பு​கள் குறித்து சர்​வ​தேச அளவில் ஆய்வு நடத்​தப்​பட்​டது. 11.3 லட்​சம் பேரை உள்​ளடக்​கிய 48 ஆய்​வு​களின் பகுப்​பாய்​வு, புகைப்​பிடிப்​பவர்​களுக்கு மரண அபா​யம் 55 சதவீதம் அதி​கம் இருப்​ப​தைக் கண்​டறிந்​தது.

மேலும், சுமார் 1.3 லட்​சம் நீரிழிவு நோயாளி​களை ஆய்வு செய்த மற்​றொரு ஆய்​வில், புகைப்​பிடிப்​பவர்​களுக்கு ஒட்​டுமொத்த மரண விகிதம் 48 சதவீத​மும், இதய நோயால் ஏற்​படும் மரண விகிதம் 36 சதவீத​மும் அதி​க​மாக இருப்​பது தெரிய​வந்​தது. இதன் அடிப்​படை​யில் இந்​திய நீரிழிவு நிபுணர் டாக்​டர் அனூப் மிஸ்ரா உள்​ளிட்ட 13 நாடு​களைச் சேர்ந்த 35 நிபுணர்​கள் எச்​சரிக்​கை​யுடன் கூடிய பல்​வேறு பரிந்​துரைகளை வழங்​கி​யுள்​ளனர்.

இதன்​படி புகைப்​பிடித்​தல், நீரிழிவு நோயாளி​களிடம் சிறுநீரக பாதிப்பு அபா​யத்​தை​யும் அதி​கரிக்​கிறது. குறிப்​பாக, ஆல்​புமினூரியா மற்​றும் நீரிழிவு காரண​மான சிறுநீரக நோய் ஏற்​படும் வாய்ப்பு அதி​கரிக்​கிறது. ஜப்​பானில் 2,490 டைப்-2 நீரிழிவு நோயாளி​களிடம் நடத்​தப்​பட்ட ஆய்​வில், தினசரி புகைக்​கும் சிகரெட்​டு​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கும்​போது இன்​சுலின் எதிர்ப்பு திறனும் அதி​கரிப்​ப​தை​யும், புகைப்​பிடிப்​பதை நிறுத்​திய பிறகு அது குறைவதை​யும் கண்​டறியப்பட்டது.

நீரிழிவு சிகிச்​சை​யில் தற்​போது புகைப்​பிடிப்​பதை நிறுத்​து​வது குறித்த ஆலோ​சனை பெரும்​பாலும் குறுகிய அறி​வுரைகளாகவே உள்​ளன. எனவே, வழக்​க​மான புகைப்பிடிப்பதை மதிப்​பீடு, செயலில் சிகிச்​சை, உடல்​நலக் கண்​காணிப்​பு மற்​றும்​ மீண்​டும்​ புகைப்​பிடிப்​பதை தடுக்​கும்​ நடவடிக்​கைகள்​ ஆகியவை நீரிழிவு ப​ராமரிப்​பின்​ ஒரு பகு​தி​யாக இருக்​க வேண்​டும்​. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT