இந்தியா

மேகேதாட்டு திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு தேவகவுடா கடிதம்

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக அரசு காவிரி ஆற்​றின் குறுக்கே மேகேதாட்டு​வில் புதிய அணை கட்​டு​வதற்கு மத்​திய அரசு உடனடி​யாக அனு​மதி வழங்க வேண்​டும் என பிரதமர் நரேந்​திர மோடிக்கு முன்​னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் எழு​தி​யுள்​ளார்.

கடந்த 13-ம் தேதி மைசூரு​வில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது கர்​நாடக முதல்வர் டி.கே.சிவகு​மார், “மேகே​தாட்​டு​வில் அணை கட்​டு​வதற்கு மத்​திய அரசு அனு​மதி அளிக்க வேண்​டும். இந்த விவ​காரத்​தில் கர்நாடகா​வுக்கு துணை​யாக பிரதமர் நரேந்​திர மோடி இருக்க வேண்டும்” என வலி​யுறுத்​தி​னார்.

இந்​நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடிக்கு முன்​னாள் பிரதமர் தேவக​வுடா மேகே​தாட்டு விவ​காரம் தொடர்​பாக எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யுள்​ள​தாவது: கடந்த 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக கர்​நாடக அரசு தமிழகத்​துக்கு உரிய நீரை மாத வாரி​யாக வழங்கி வரு​கிறது. வறட்சி காலங்​களி​லும் நீர் பங்​கீடு சுமூக​மாக நடை​பெறுகிறது.

மழைக்​காலங்​களில் காவிரி ஆற்​றின் குறுக்​கே​யுள்ள அனைத்து அணை​களும் நிரம்​பி, அதி​களவி​லான நீர் கடலில் வீணாக கலக்கிறது. இந்த நீரை சேமித்​தால் வறட்சி காலங்​களில் கர்நாடகா, தமிழ்​நாடு உள்​ளிட்ட மாநிலங்​கள் பயனடைய​லாம். வீணாகும் நீரை சேமிக்க மேகே​தாட்​டு​வில் கர்​நாடக அரசு அணை கட்ட திட்​ட​மிட்​டது. தமிழக அரசின் எதிர்ப்​பால் இந்த அணை சாத்தி​ய​மாக​வில்​லை. எனவே மத்​திய அரசு உடனடி​யாக தலையிட்டு கர்​நாடக அரசு அணை கட்​டு​வதற்கு உரிய அனுமதியை வழங்க வேண்​டும்.இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT