புதுடெல்லி: நாட்டின் மிகப் பெரிய விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு தினமும் சுமார் 1,300 விமானங்கள் கையாளப்படுகின்றன.
இந்நிலையில், டெல்லியில் நேற்று காலையில் கடும் பனிமூட்டம் காரணமாக இந்த விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. இங்கு நேற்று 6 விமானங்கள் தரையிறங்குவதும், 4 விமா னங்கள் புறப்படுவதும் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் நேற்று 270-க்கும் மேற்பட்ட விமான சேவையில் தாமதம் எற்பட்டது.