புதுடெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று 66 விமானங்களின் வருகையும், 63 விமானங்களின் புறப்பாடும் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் நேற்று மதியம் நிலைமை சீராகி அனைத்து விமானங்களும் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியதாகவும் பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை அணுகி விவரத்தை அறியலாம் எனவும் டெல்லி விமான நிலையத்தை நிர்வகிக்கும் டயல் நிறுவனம் தெரிவித்தது.