பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த பேருந்து

 
இந்தியா

டெல்லி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை தண்டிக்க மகளிர் ஆணைய தலைவி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், நொய்டாவில் உள்ள தனது உறவினரைச் சந்திக்க கடந்த மாதம் 4-ம் தேதி பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது, கனமழை மற்றும் இருள் சூழ்ந்திருந்த நிலையில், சிறுமி தவறுதலாக பாரி சவுக் பகுதியில் இறங்கியுள்ளார். அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, சிறுமி உதவி கோரி சைகை செய்ததைத் தொடர்ந்து நின்றுள்ளது.

பேருந்து ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர் சந்தீப் ஆகியோர், பேருந்து நொய்டா செக்டார் 63-க்குச் செல்வதாகக் கூறி, சிறுமியை பேருந்தில் ஏற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், சிறுமியை இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு இருவரும் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பேருந்து ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர் சந்தீப் கைது செய்யப்பட் டுள்ளனர். இதுகுறித்து, தேசிய மகளிர் ஆணையத் தலைவி லதா குப்தா கூறும்போது, ‘‘இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஒரு பெண் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, அவரது விவகாரத்தைக் கையாளும் பல்வேறு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லையென்றால், நீதிமன்றங்கள் அல்லது காவல் நிர்வாகம் என எந்தத் தரப்பாக இருந்தாலும், அந்த ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது மகளிர் ஆணையத்தின் பொறுப்பு’’ என்றார்.

SCROLL FOR NEXT