கேஜ்ரி​வால் | சிசோடி​யா

 
இந்தியா

கேஜ்ரி​வால், சிசோடி​யா​வுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீதி​மன்ற விசா​ரணை குறித்து கேஜ்ரி​வால், மணீஷ் சிசோடி​யா, துர்​கேஷ் பதக் ஆகியோர் அவதூறான கருத்​துகளை வெளி​யிட்​ட​தாக டெல்லி உயர் நீதி​மன்​றம் நேற்று தெரி​வித்​தது.

டெல்லி மது​பான கொள்கை ஊழல் வழக்​கில் டெல்லி முன்​னாள் முதல்​வரும் ஆம் ஆத்மி கட்​சி​யின் தலை​வரு​மான அர்​விந்த் கேஜ்ரிவாலை சிறப்பு நீதி​மன்​றம் கடந்த பிப்​ர​வரி 27ம் தேதி விடுவித்தது. இதற்கு எதி​ராக டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் சிபிஐ மேல் முறையீடு செய்​துள்​ளது. இந்த மனு மீதான விசா​ரணையை புறக்கணிப்​ப​தாக ஆம் ஆத்​மி​யின் அர்​விந்த் கேஜ்ரி​வால், மணீஷ் சிசோடி​யா, துர்​கேஷ் பதக் உள்​ளிட்​டோர் நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்​மாவுக்கு கடிதம் எழு​தினர்.

கேஜ்ரி​வால் தனது கடிதத்​தில், “சிபிஐ மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரிக்​கும் நீதிபதி மீது நம்​பிக்கை இல்லை என்​ப​தால் நேரிலோ அல்​லது வழக்​கறிஞர் மூல​மாகவோ ஆஜராகப் போவ​தில்​லை. இதற்​கான விளைவு​களை சந்​திக்​கத் தயா​ராக உள்​ளேன். விடு​தலையை ரத்து செய்​தால் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​படும்” என்று கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் இது தொடர்​பான விசா​ரணை டெல்லி உயர் நீதிமன்றத்​தில் நடை​பெற்​றது. அப்​போது நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்​மா, “இந்த வழக்​கில் விசா​ரணை நீதி​மன்​றத்​தால் விடுவிக்கப்பட்ட நபர்​கள் உயர் நீதி​மன்ற விசா​ரணை குறித்து அவதூறான கருத்​துகளை வெளி​யிட்டு வரு​கின்​றனர். அவர்களுக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு விசா​ரணை நடத்தப்படும். இந்த விவ​காரத்​தில் நீதி​மன்​றம் கைகட்டி வேடிக்கை பார்க்க முடி​யாது” என்​றார்.

இதையடுத்து கேஜ்ரி​வால், மணீஷ் சிசோடி​யா, துர்​கேஷ் பதக் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்​பு நடவடிக்​கைக்​கான நோட்​டீஸ்​ அனுப்ப உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT