பனையூரில் ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பில் இளைஞர் உயிரிழப்பு

பனையூரில் ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பில் இளைஞர் உயிரிழப்பு
Updated on
1 min read

பனையூர்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றது.

இதையடுத்து அந்த திரைப்படத்தின் 2-வது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. திரைப்படத்தின் படப்பிடிப்பு பனையூர் ஆதித்யராம் திரைப்பட நகரின் ஒரு தளத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது.

இதற்காக வீடு போன்று செட் அமைக்கு பணியில் கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மின் இணைப்பு பெட்டியில், மின்கசிவு ஏற்பட்டு, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சேலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (29) என்பவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கானத்தூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

பனையூரில் ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பில் இளைஞர் உயிரிழப்பு
“நீட் தேர்வு முறையை ரத்து செய்க” - முதல்வர் விஜய்யை குறிப்பிட்டு ராஜ் தாக்கரே வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in