இந்தியா

நடைபாதை ஆக்கிரமிப்பை அனுமதிக்கவே முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடை​பாதை​யில் குடிசைகளை​யோ, கடைகளையோ கட்​டு​வது சட்ட விரோதம் எனக்​கூறிய டெல்லி உயர் நீதி​மன்​றம், பாத​சா​ரி​கள் நடப்​ப​தற்​காக மட்​டுமே நடை​பாதைகள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தால் அதனை ஆக்​கிரமிப்​பதை ஒருபோதும் அனு​ம​திக்க முடி​யாது என திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளது.

டெல்​லி​யில் லோஹர் பஸ்​தி, லால் பாக், ஆசாத் நகர், விகாஸ் சமி​தி, உள்​ளிட்ட இடங்​களில் பொது இடத்தை ஆக்​கிரமித்​தும், நடை​பாதையை ஆக்​கிரமித்தும் கட்​டப்​பட்​டிருந்த குடிசை கள், கடைகள் உள்​ளிட்​ட வற்றை இடித்து அகற்​றும் நடவடிக்​கையை பொதுப்​பணித்​துறை, மாநக​ராட்சி இணைந்து எடுத்​தது.

இந்த நடவடிக்​கைக்கு தடை விதிக்​க​வும், கட்​டு​மானங்​களை இடிப்​பது தொடர்​பாக வழங்​கப்​பட்ட நோட்​டீசை சட்​ட​விரோதம் என ரத்து செய்​யக்​கோரி​யும் டெல்லி உயர்​நீ​தி​மன்​றத்​தில் அப்​பகுதி மக்​கள் சார்​பில் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுக்​கள் டெல்லி உயர்​நீ​தி​மன்​றத்​தில் நீதிபதி ஜஸ்​மீத் சிங் முன்பு விசா​ரணைக்கு வந்​த​போது, நடை​பாதை​யில் குடிசைகளை​யோ, கடைகளையோ கட்​டு​வது சட்ட விரோதம் ஆகும், நடை​பாதைகளில் இது​போன்ற ஆக்​கிரமிப்​பு​களை அனு​ம​திக்க முடி​யாது என தெரி​வித்​தார்.

மேலும், சாலைகளில் போக்​கு​வரத்து நெரிசலைத் தவிர்ப்​ப​தற்​காக, பாத​சா​ரி​கள் நடப்​ப​தற்​காக மட்​டுமே நடை​பாதைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன, எனவே நடை​பாதைகளை எந்த காரணத்​துக்கா​வும் ஆக்​கிரமிப்பு செய்​வதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது என்​றும், மேற்​கூறிய காரணங்​களுக்​காக, இந்த மனுவை விசா​ரிக்க விரும்​ப​வில்லை என்​றும் நீதிபதி தெரி​வித்​தார்.

ஆனால் மனு​தா​ரர்​கள் தரப்பு வழக்​கறிஞர் ராகவேந்​திர உபாத்​யாய் ஆஜராகி, இந்​தப் பகு​தி​யில் குடி​யிருக்​கும் மக்​களுக்கு மறு​வாழ்வு திட்​டம் செயல்​படுத்​தும் வரை குடிசைகளை​யும், கடைகளை இடித்து அகற்ற தடை விதிக்க வேண்​டும் என்று கோரிக்கை வைத்​தார்.

அதனை ஏற்க மறுத்த நீதிப​தி, ஆக்​கிரமிப்​பு​களை இடிப்​ப​தற்கு எந்த தடை​யும் விதிக்க முடி​யாது, ஆனால் மறு​வாழ்வு திட்​டம் செயல்​படுத்​து​வது குறித்​தகோரிக்​கையை அரசு ​நான்​கு ​வாரத்​தில்​ பரிசீலிக்​க வேண்​டும்​ என உத்​தர​விட்​டு வழக்​கை முடித்​து வைத்​​தார்​.

SCROLL FOR NEXT