இந்தியா

லாலு, ராப்ரி தேவி மீது குற்றச்சாட்டு பதிய உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கடந்த 2004 - 2009 கால கட்டத்தில் ரயில்வே அமைச்சராக ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் பதவி வகித்தார். அப்போது, நிலத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு ரயில்வேயில் வேலை அளித்ததாக லாலு, அவரது குடும்பத்தினருக்கு எதிராக சிபிஐ கடந்த 2022-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்குகளை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, லாலுவுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும், மீதமுள்ள அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக மோசடி, குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT