இந்தியா

பிரெஸ்ஸாவுக்கு பதில் ஆரா கார் தந்ததால் திருமணம் ரத்து: டெல்லி காவலர் மீது மணமகளின் தந்தை புகார்

செய்திப்பிரிவு

சண்டிகர்: ஹரியானா மாநிலம் சோனிபட்​டில், கேட்ட கார் கிடைக்​க​வில்லை என்று கூறி திரு​மணத்தை ரத்து செய்​த​தாக, டெல்லி காவலர் மீது மணமகளின் தந்தை போலீசில் புகார் அளித்​துள்​ளார்.

டெல்லி காவலர் குல்​தீப்​புக்​கும் சுபாஷ் குமாரின் மகள் ஹீனா​வுக்​கும் ஆறு மாதங்​களுக்கு முன்பு திரு​மணம் நிச்​சயிக்​கப்​பட்​டது. ஹீனா எம்.ஏ. ஜே.பி.டி. படித்​தவர். திரு​மணம் உறுதி​யான பிறகு மாப்​பிள்ளை வீட்​டார் கார், நகைகள் கேட்​கத் தொடங்​கினர். இத​னால் சுபாஷ் ரூ.9.5 லட்​சத்​தில் ஹூண்​டாய் ஆரா காரை முன்​ப​திவு செய்​தார்.

ஆனால், திரு​மணத்​துக்கு ஒரு நாள் முன்பு, ரூ.13 லட்​சம் மதிப்​புள்ள மாருதி பிரெஸ்ஸா தான் வேண்​டும் என்று குல்​தீப் கேட்​டார். ஆரா முன்​ப​திவை ரத்து செய்​து​விட்டு பிரெஸ்ஸாவை வாங்க முயன்​றனர். ஆனால், குறுகிய நேரத்​தில் அதை ஏற்​பாடு செய்ய முடிய​வில்லை. நவம்​பர் 20 அன்று மாம்​சந்த் வாடிகா​வில் திரு​மணம் நடை​பெற இருந்​தது.

மாப்​பிள்ளை, அவரது தாய், அண்​ணன், அண்ணி ஆகியோ​ருக்கு நகைகள் தரு​வ​தாகப் பெண் வீட்​டார் ஒப்​புக்​கொண்​டிருந்​தனர். அவற்​றுக்கு ஆர்​டரும் கொடுக்​கப்​பட்​டது. மரச்​சாமான்​களுக்கு மட்​டும் சுமார் ரூ.1.32 லட்​சம் செல​வானது. மொத்​தத்​தில் ரூ.25 லட்​சம் முதல் ரூ.30 லட்​சம் வரை செலவு செய்​த​தாக சுபாஷ் குமார் கூறியுள்​ளார்.

வாக்குவாதம்: திரு​மண நாளன்று 1,200 விருந்​தினர்​களுக்கு உணவு தயாராக இருந்​தது. ஆனால், குல்​தீப் திரு​மண ஊர்​வலத்​தில் கலந்து கொள்​ளாமல், தாயுடன் சாதா​ரண உடை​யில் வந்து பிரெஸ்ஸா காரைத் தேடிய​தாகக் கூறப்​படு​கிறது. கார் இல்​லாததால் இரு குடும்​பத்​தினருக்​கும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதையடுத்து மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டு கிளம்பிவிட்டனர்.

இதுகுறித்து மணமகளின் தந்தை சுபாஷ்குமார் காவல்துறையில் அளித்துள்ள புகாரில், ‘‘குல்​தீப் தங்​களைத் திட்​டிய​தாகவும், ஹீனாவின் சகோ​தரர் சாஹிலுடன் தக​ராறு செய்​த​தாகவும் குற்​றம் சாட்​டியுள்​ளார். உறவினர்​கள் கைகூப்பி கெஞ்​சி​யும், குல்​தீப்​பும் அவரது தாயும் மறுத்து வெளியேறி​விட்​டனர், மணமகள் மணக்​கோலத்​தில் மணமேடை​யில் காத்​திருந்​தார்.

மாப்​பிள்ளை தரப்​பில் 20 முதல் 30 பேர் மட்​டுமே வந்​தனர், மணமகன் மற்றும் அவரது உறவினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரி​வித்​துள்​ளார். மாப்​பிள்ளை தரப்பு கருத்து எதுவும் இது​வரை வெளியாக​வில்லை.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT