இந்தியா

பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லி முதல்வர் ரேகா சந்திப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தா பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் ரேகா குப்தா வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமருடனான இந்த சந்திப்பில் அவரது விலைமதிப்பற்ற வழிகாட்டுதலை பெற்றேன். உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது உட்பட டெல்லியின் அனைத்துத் துறை வளர்ச்சி குறித்தும் விரிவாக ஆலோசித்தோம்.

பிரதமரின் திறமையான வழிகாட்டுதல் மற்றும் தொடர் ஆதரவுடன் டெல்லியை வளர்ச்சி, செழிப்பு மற்றும் நல்லாட்சியின் புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT