கர்நாடகாவில் உயரதிகாரி அழுத்தத்தால் அரசு அதிகாரி தற்கொலை

கர்நாடகாவில் உயரதிகாரி அழுத்தத்தால் அரசு அதிகாரி தற்கொலை
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவின் துமக்கூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்த மல்லிகார்ஜுன் (59) அரசின் சமூக நலத்துறை மாவட்ட துணை அலுவலராக பணியாற்றி வந்தார். வரும் 30ம்-தேதியுடன் ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மல்லிகார்ஜுனுக்கு சமூக நலத்துறை மாவட்ட இயக்குநர் கிருஷ்ணப்பா நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பினார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மல்லிகார்ஜுன் அன்று மாலை அரசு அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன் மல்லிகார்ஜுன் பதிவு செய்த வீடியோவில், ‘‘கிருஷ்ணப்பா என் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி துன்புறுத்தி வருவதால் தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என கூறியுள்ளார். இதுகுறித்து பாவகடா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன‌ர்.

கர்நாடகாவில் உயரதிகாரி அழுத்தத்தால் அரசு அதிகாரி தற்கொலை
ம.பி.யின் ட்ரீம் குழுமத்துக்கு: சிறந்த சேவைக்கான விருது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in