இந்தியா

விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவினால் ரூ.25,000 பரிசு: டெல்லி முதல்வர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் சாலை விபத்​தில் சிக்​கிய​வர்​களை 1 மணி நேரத்​துக்​குள் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கும் நபருக்கு டெல்லி அரசு ரூ.25,000 பரிசு வழங்க உள்​ளது.

இதுதொடர்​பாக மத்​திய அரசின் ‘ரஹ்-வீர்’ திட்​டத்தை தலைநகரில் செயல்​படுத்த உள்​ள​தாக டெல்லி அரசு நேற்று முன்​தினம் அறி​வித்​தது. விபத்​தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்ற முதல் 1 மணி நேரம் ‘கோல்​டன் ஹவர்’ என்று அழைக்​கப்​படு​கிறது.

          

அந்த ஒரு மணி நேரத்​துக்​குள் சிகிச்சை அளிக்​கப்​படு​வதை உறுதி செய்​பவருக்கு ரூ.25,000 பரிசு மற்​றும் பாராட்டு சான்​றிதழ் வழங்​கும் ‘ரஹ்-வீர்’ திட்​டத்தை மத்​திய சாலைப் போக்​கு​வரத்து அமைச்​சகம் அறி​வித்​தது. இந்த திட்​டத்தை டெல்​லி​யில் செயல்​படுத்த உள்​ள​தாக முதல்​வர் ரேகா குப்தா அறி​வித்​தார்.

நிபந்தனைகள்: விபத்​தில் சிக்​கிய​வர்​களை உடனடி​யாக மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்று உயிரை காப்​பாற்​று​வோருக்கு மட்​டுமே இந்​தப் பரிசு வழங்​கப்​படும். ஒரு விபத்​தில் எத்​தனை பேரை மீட்​டாலும் மீட்​பவருக்கு ரூ.25,000 வழங்​கப்​படும். இவ்​வாறு உதவி செய்​வோரில் ஒவ்​வொரு ஆண்​டும் சிறந்த 10 பேரை தேர்வு செய்து அவர்​களுக்கு ரூ.1 லட்​சம் பரிசுடன் தேசிய விருது வழங்​கப்​படும்.

SCROLL FOR NEXT