Manoj Kumar
இந்தியா

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிரான மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவர் சோம்நாத் பாரதியின் மனைவி லிபிகா மித்ரா டெல்லி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதில், கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தனது கணவர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கூறியிருந்தார். இந்த வழக்கை கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பரஸ் தலால் நேற்று விசாரித்தார். அப்போது இந்த வழக்கை மேலும் விசாரிக்க முகாந்திரம் எதுவும் இல்லை என்று தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

          
SCROLL FOR NEXT