மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

 
இந்தியா

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை விவாதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு எதி​ரான நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் மீது மக்​களவை​யில் நாளை விவாதம் நடை​பெற உள்​ளது.

நாடாளு​மன்ற முதல் கட்ட பட்​ஜெட் கூட்​டத் தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்​ர​வரி 13-ம் தேதி வரை நடை​பெற்​றது. கடந்த பிப்​ர​வரி 2-ம் தேதி மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி அவை​யில் பேசி​னார். அப்​போது முன்​னாள் ராணுவ தளபதி நரவனே​வின் நினை​வுக் குறிப்​பின் அடிப்​படை​யில் எழுதப்​பட்ட புத்​தகத்தை மேற்​கோள் காட்​டி, சீன எல்​லைப் பிரச்​சினை குறித்து பேச அவர் முயன்​றார். அவருக்கு அனு​மதி மறுக்​கப்​பட்​டது.

          

இதன் காரண​மாக மக்​களவை, மாநிலங்​களவையை எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து முடக்​கின. இதுதொடர்​பாக மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு எதி​ராக எதிர்க்​கட்​சிகள் கடந்த பிப்​ர​வரி 10-ம் தேதி நம்​பிக்​கை​யில்லா தீர்​மான நோட்​டீஸ் வழங்​கின. இதில் காங்​கிரஸ், திமுக, சமாஜ்​வா​தி, ராஷ்டிரிய ஜனதா தளம், கம்​யூனிஸ்ட் கட்​சிகளை சேர்ந்த 118 எம்​.பி.க்​கள் கையெழுத்​திட்டு உள்​ளனர். திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் நோட்​டீஸில் கையெழுத்​திட​வில்​லை.

இந்த சூழலில் பட்​ஜெட் கூட்​டத் தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்கி ஏப்​ரல் 2-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. முதல் நாளில் சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு எதி​ரான நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் விவாதத்​துக்கு எடுத்​துக் கொள்​ளப்பட உள்​ளது.

சபா​நாயகருக்கு எதி​ராக தீர்​மானம் அளிக்​கப்​பட்ட நாள் முதலே அவர் மக்​களவையை நடத்​த​வில்​லை. மூத்த எம்​.பி.க்களே அவையை நடத்தி வரு​கின்​றனர். நாளைய தின​மும் அவர் மக்​களவையை வழிநடத்த மாட்​டார். அவை​யில் ஆளுங்​கட்சி வரிசை​யில் அமர்ந்​திருப்​பார்.

மக்​களவையை நடத்​தும் மூத்த எம்​.பி., சபா​நாயகருக்கு எதி​ரான தீர்​மானத்தை ஏற்​ப​தா, வேண்​டாமா என்​பது குறித்து முதலில் வாக்​கெடுப்பு நடத்​து​வார். 50 எம்​.பி.க்​கள் எழுந்து தீர்​மானத்தை ஆதரித்​தால் நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் மீது விவாதம் தொடங்​கும். விவாதம் நிறைவடைந்த பிறகு இறு​தி​யாக வாக்​கெடுப்பு நடத்​தப்​படும்.

சபா​நாயகருக்கு எதி​ரான நம்​பிக்​கை​யில்லா தீர்​மானத்தை நிறைவேற்ற அவை​யில் இருக்​கும் எம்​.பி.க்​களில் 50 சதவீத எம்​.பி.க்​களின் ஆதரவு தேவை. மக்​களவை​யில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 293 எம்​.பி.க்​கள் உள்​ளனர். காங்​கிரஸ், திமுக, சமாஜ்​வாதி உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகளுக்கு 238 எம்​.பி.க்​கள் (திரிண​மூல் கட்​சி​யை​யும் சேர்த்​து) மட்​டுமே உள்​ளனர். எனவே, சபா​நாயகருக்கு எதி​ரான தீர்​மானம் தோல்வி அடைவது உறுதி என்று அரசி​யல் நோக்​கர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சபா​நாயகருக்கு எதி​ரான நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் மீது மக்​களவை​யில் விவாதம் நடை​பெற உள்ள நிலை​யில், பாஜக மற்​றும் காங்​கிரஸ் சார்​பில் கொறடா உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்டு உள்​ளது. மார்ச் 9 முதல் 11-ம் தேதி வரை எம்​.பி.க்​கள் அனை​வரும் அவை​யில் தவறாமல் கலந்து கொள்ள வேண்​டும் என்று இரு கட்​சிகளும் தங்​களது எம்​.பி.க்​களுக்கு கண்​டிப்​புடன் உத்​தர​விட்​டுள்​ளன.

திரிண​மூல் திடீர் ஆதரவு: சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் அளிக்​கப்​பட்ட போது திரிண​மூல் காங்​கிரஸின் 28 எம்​.பி.க்​கள் கையெழுத்​திட​வில்​லை. தற்​போது திடீர் திருப்​ப​மாக தீர்​மானத்​துக்கு ஆதர​வாக வாக்​களிக்​கு​மாறு திரிண​மூல் எம்​.பி.க்​களுக்கு அந்த கட்​சி​யின்​ தலை​வர்​ மம்​தா பானர்​ஜி உத்​தர​விட்​டிருப்​ப​தாக தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.

SCROLL FOR NEXT