ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் லத்தேஹார் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 80-க்கும் மேற்பட்டோருடன் சென்ற தனியார் பேருந்து மகுவாடானார் காவல் எல்லைக்குட்பட்ட ஓர்சா பங்களா தாரா பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்தப் பேருந்து பல்ராம்பூர் மாவட்டத்தில் இருந்து திருமண விருந்தினர்களுடன் லத்தேஹார் மாவட்டத்தின் மகுவாடானார் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அம்பிகாபூர் மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.