

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
புதுடெல்லி: ஒருவருடைய வழக்கில் விரைவான விசாரணைக்கு சாத்தியமில்லாத போது ஜாமீன் வழங்குவதே விதியாக இருக்க வேண்டும் என முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநடே வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “இலக்கிய விழாக்களில் பேசுவதற்கு இதுபோன்ற வார்த்தைகள் அலங்கார மாக உள்ளன. ஆனால், பதவியில் இருந்தபோது சரியானதை செய்ய உங்களைத் தடுத்தது எது?
வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் கொண்ட அவர், உமர் காலித்தின் ஜாமீன் மனுவின் கதி என்னவாகும் என்று தெரிந்தே நீதிபதி பெலா திரிவேதி அமர்வுக்கு அதை மாற்றினார்" என்று குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.