இந்தியா

ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு டிஏசி ஒப்புதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய ராணுவம், கடற்​படை மற்​றும் விமானப் படை ஆகிய​வற்​றின் தற்​காப்​புத் திறனை மேம்​படுத்​தும் வகை​யில் ரூ.1.1 லட்​சம் கோடி மதிப்​பிலான ராணுவ தளவாட கொள்​முதல் திட்​டங்​களுக்கு ராணுவ தளவாட கொள்​முதல் குழு (டிஏசி) ஒப்புதல் அளித்​துள்​ளது.

ராணுவ தளவாட கொள்​முதல் குழு (டிஏசி) கூட்​டம் பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தலை​மை​யில் நேற்று நடைபெற்றது. அப்​போது, ராணுவத்​தின் தேவை​களுக்​காக ரசாயன உயி​ரியல் கதிர்​வீச்சு மற்​றும் அணுஆ​யுத உளவு வாகனங்​கள் (சிபிஆர்​என்), அதிவேக இயங்கு வாக​னங்​கள், தானியங்கி வெடிபொருள் புதைக்​கும் இயந்​திரங்​கள், மேம்படுத்தப்​பட்ட இலகுரக ஹெலி​காப்​டர்​கள் , ‘ட்​ரால்' டாங்​கி​கள் மற்​றும் ‘சர்​வத்​ரா' பால அமைப்​பு​கள் ஆகிய​வற்றை வாங்குவதற்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

கதிர்​வீச்சு மற்​றும் ரசாயனப் பாதிப்​புள்ள பகு​தி​களைக் கண்​டறிய சிபிஆர்​என் வாக​னங்​கள் உதவும். ‘சர்​வத்​ரா' பால அமைப்​பு​கள் மற்​றும் ட்ரால் டாங்​கி​கள் கடின​மான நிலப்​பரப்​பு​களில் ராணுவப் படைகளின் விரை​வான நகர்​வுக்கு வழி​வகுக்​கும்.

இந்​தி​யக் கடற்​படைக்​காக ஆருத்ரா ரேடார்​களைக் கொள்​முதல் செய்​ய​வும், போர்க்​கப்​பல்​களின் உந்​து​விசைக்கு பயன்​படும் மரைன் காஸ் டர்பைன்​களை உள்​நாட்​டிலேயே வடிவ​மைத்து உரு​வாக்​கம் செய்யவும் ஒப்​புதல் வழங்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT