இந்தியா

'முரசு' புயலால் ராயலசீமா, கடலோர ஆந்திர பகுதியில் கனமழை

என். மகேஷ்குமார்

அமராவதி: வங்​கக் கடலில் உரு​வான ‘முரசு’ புயலின் தாக்கம் காரண​மாக, ராயலசீமா, கடலோர ஆந்​திரா பகுதி​களில் அதி கனமழை பெய்து வரு​கிறது.

ஆந்திராவில் சமீபத்​தில் ஏற்பட்ட ‘அர்​னாப்’ புயல் தாக்​கத்​தால் ரூ.4,600 கோடி இழப்பு ஏற்​பட்​ட​தாக முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு மத்​திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்​ளார். மேலும், அர்​னாப் புயலுக்கு மின்​சா​ரம் தாக்​கி​யும், சுவர்​கள் இடிந்து விழுந்​தும் 9 பேர் பரிதாபமாக உயி​ரிழந்​தனர்.

சீரமைப்பு பணிகள் முடிந்து மக்​கள் இயல்பு வாழ்க்​கைக்கு திரும்பி வரும் சமயத்​தில், அடுத்​த​தாக மேற்கு மத்​திய வங்க கடலில் ஏற்​பட்ட குறைந்​தழுத்த தாழ்வு மண்​டலம் புய​லாக மாறியது. இதற்கு ‘முரசு’ என பெயர் வைக்​கப்​பட்​டது. இப்​புயல் மீண்​டும் ஆந்​திராவின் பக்​கம் திசை திரும்​பியது. நெல்​லூர்-நர்​சாபூர் இடையே ஓங்​கோல் அருகே ‘முரசு’ புயல் திங்​கட்​கிழமை நள்​ளிரவு முதல் செவ்​வாய்க்​கிழமை அதி​காலைக்​குள் கரையை கடக்​கும் என விசாகப்​பட்​டின வானிலை மையம் எச்சரித்திருந்தது.

இது நேற்று மாலை 6 மணி நில​வரப்​படி, நெல்​லூருக்கு 80 கி.மீ தூரத்​திலும், காவலிக்கு 90, திருப்​ப​திக்கு 160, ஓங்​கோல் 120, பாபட்லா 150 கி.மீ. தூரத்​திலும் மையம் கொண்​டிருந்​தது. இது கடந்த 6 மணி நேரத்​தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்​தில் கரையை நோக்கி நகர்ந்து சென்​றது. முரசு புயல் நள்​ளிரவு கரையை கடக்கும் போது மணிக்கு 100 - 120 கி.மீ. வேகத்​தில் சூறாவளி காற்று வீசும் எனவும் விசாகப்​பட்​டின வானிலை மையம் எச்சரித்திருந்தது.

முரசு புய​லால் நேற்று காலை முதலே ஆந்​திராவின் நெல்​லூர், பாபட்லா, பிரகாசம், குண்​டூர், திருப்​பதி, சித்​தூர் மாவட்​டங்​களில் தொடர் மழையும், சில இடங்​களில் கன மழையும் பெய்​தது. மாலைக்கு பின்​னர் நெல்​லூரில் இருந்து பாபட்லா வரை பலத்த காற்று வீசத்​தொடங்​கியது.

நெல்​லூர், பாபட்லா, பிரகாசம் மாவட்டங்​களில் பள்ளி, கல்​லூரி​களுக்கு நேற்று விடு​முறை அறிவிக்​கப்​பட்​டது. முரசு புயல் காரண​மாக நேற்று விஜய​வாடா-கூடூரு, கூடூரு-விஜய​வாடா, குண்​டூர்-தெனாலி, தெனாலி-ரேபல்லே, மார்க்​கப்​பூர் ரோடு-தெனாலி, தெனாலி, குண்​டூர் ஆகிய 7 ரயில்களை தென் மத்​திய ரயில்​வே துறை ரத்து செய்​துவிட்டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT