இந்தியா

நடப்பாண்டில் சைபர் கிரைம் புகார்கள் குறைவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்​பாண்​டில் சைபர் கிரைம் புகார்​களின் எண்ணிக்கை குறைந்​துள்​ள​தாக உச்ச நீதி​மன்​றத்​தில் மத்திய அரசு தெரி​வித்​துள்​ளது.

உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் அடங்​கிய அமர்விடம் அட்​டர்னி ஜெனரல் வெங்​கடரமணி நேற்று பிர​மாணப் பத்​திரம் ஒன்​றைத் தாக்​கல் செய்​தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இணை​ய​வழி குற்​றங்​கள் மற்​றும் ‘டிஜிட்​டல் கைது’ சம்​பவங்​களில் 75% சரிவு ஏற்​பட்​டிருந்​தா​லும், குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்​கு​மாறு உச்ச நீதி​மன்​றம் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறது.

அதை மத்​திய அரசு கடைப்​பிடித்து வரு​கிறது.கடந்த 2024-ம் ஆண்​டில் சைபர் கிரைம் பிரிவுக்கு வந்த புகார்​களின் எண்​ணிக்கை 1,23,672-ஆக இருந்​தது. நடப்​பாண்​டில் (ஜூன் 30 வரை) 16,377 புகார்​கள் மட்​டுமே வந்​துள்​ளன. சுமார் 36,000 இணை​ய​வழி மோசடி வழக்​கு​களால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.18 கோடி திரும்​பப் பெற்று வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்​து, நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில், “இணை​ய​வழி மோசடி​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உரிய தீர்வு கிடைக்​கும் வகை​யில் போது​மான விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்பட வேண்​டும். மோசடிக்​காரர்​களிட​மிருந்து மீட்​கப்​படும் பணத்தை ‘டிஜிட்​டல் கைது’ மோசடி​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு விரை​வாக வழங்​கப்​படு​வதை உறுதி செய்ய வேண்​டும்” என கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT