இந்தியா

தருண் தேஜ்பால் 2 வாரங்களில் சரணடைய நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2013-ல் உடன் பணிபுரிந்த பெண் பத்திரிகையாளரைப் பாலியல் வன்கொடுமை செய்​த​தாக, ‘தெஹல்கா’ முன்​னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது கோவாவில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இந்த வழக்​கில், போதிய ஆதா​ரங்​கள் இல்லை எனக் கூறி தருண் தேஜ்​பாலை கடந்த 2021-ம் ஆண்டு விசா​ரணை நீதி​மன்​றம் விடு​வித்​தது.

இதை எதிர்த்​துத் தொடரப்​பட்ட மேல்​முறை​யீட்டு வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதி​மன்​றம், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி தருண் தேஜ்​பாலுக்கு 10 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை​யும் அபராத​மும் விதித்​துத் தீர்ப்​பளித்​தது. இந்​தத் தீர்ப்பை எதிர்த்து தருண் தேஜ்பால் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு தாக்கல் செய்​ததோடு, தான் சரணடைவ​தில் இருந்து விலக்கு கோரி இடைக்​கால மனு ஒன்​றை​யும் தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனுக்​கள், உச்ச நீதி​மன்ற நீதிபதி அலோக் ஆராதே தலைமையி​லான அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது, சரணடைவ​தில் இருந்து விலக்கு கோரி தருண் தேஜ்பால் தாக்​கல் செய்​திருந்த மனுவை நீதிப​தி​கள் நிராகரித்தனர்.

மேலும், அவர் 2 வாரங்​களில் சரணடைய வேண்டும் என்​றும் அதற்கான சான்​றிதழைத் தாக்​கல் செய்த பின்னரே, உயர் நீதிமன்​றத்​தால் வழங்​கப்​பட்ட தண்​டனைக்கு எதிரான மேல்​முறை​யீட்டு மனு வி​சா​ரணைக்கு எடுத்​துக்​கொள்ளப்​படும் என்றும்​ நீதிப​தி​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT