இந்தியா

அரசு ஊழியர்களுக்கு எதிராக ஊழல் வழக்கு: உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு

கூடுதல் நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அரசுப் பணி​யாள​ர்களுக்கு எதி​ராக ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்த அரசிடம் ஒப்​புதல் பெறு​வதை கட்​டாய​மாக்​கும் பிரிவை எதிர்த்த மனு மீது உச்ச நீதி​மன்​றம் மாறு​பட்ட தீர்ப்பை அளித்​துள்​ளது.

இது தொடர்​பாக பொதுநல வழக்​காடு மையத்​தின் சார்​பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.வி.நாக ரத்னா, கே.​வி.விஸ்​வ​நாதன் அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது.

அப்போது, நீதிபதி பி.​வி.நாகரத்னா கூறிய தீர்ப்​பில், “அரசுப் பணியாள​ருக்கு எதி​ராக ஊழல் சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்த அரசிடம் ஒப்​புதல் பெறு​வதை கட்டாயமாக்​கும் பிரிவு அரசமைப்​புக்கு எதி​ரானது” என்று தெரிவித்தார்.

மற்​றொரு நீதிப​தி​யான கே.வி. விஸ்​வ​நாதன் கூறிய தீர்ப்​பில், “அரசுப் பணி​யாள​ருக்கு எதி​ராக ஊழல் சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்த அரசிடம் ஒப்​புதல் பெறு​வதை கட்டாய​மாக்​கும் பிரிவு செல்​லும். அரசுப் பணி​யாளரை விசா​ரிக்க வேண்​டுமா அல்​லது இல்​லையா என்​பதை லோக்​பால் அல்​லது லோக் ஆயுக்த அமைப்பு முடிவு செய்ய வேண்​டும்” என்று தெரிவித்தார்.

இரு நீதிப​தி​களும் மாறு​பட்ட தீர்ப்பை வழங்​கி​யுள்​ள​தால் இந்த விவ​காரம் தலைமை நீதிப​திக்கு அனுப்​பப்​பட்டு கூடு​தல் அமர்வு ஏற்​படுத்​தப்​பட்​டு வி​சா​ரிக்​கப்​பட உள்​ளது.

SCROLL FOR NEXT