உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்

 
இந்தியா

என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு பாடத்தில் சர்ச்சை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கண்டனம்

நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: என்​சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடத் திட்டத்​தில், ‘நீ​தித்​துறை​யில் ஊழல்’ என்ற பகுதி பெரும் சர்ச்சையை ஏற்​படுத்தி உள்​ளது. இதற்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி கண்​டனம் தெரி​வித்​துள்​ளதோடு, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்​பேன் என்​றும் எச்​சரித்​துள்​ளார்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சில் (என்​சிஇஆர்​டி) சமூக அறி​வியல் பாடத்​தில், நீதித்​துறை​யில் ஊழல் என்ற பகுதி இடம்​பெற்​றுள்​ளது. ‘நமது சமூகத்​தில் நீதித்​துறை​யின் பங்​கு’ என்ற தலைப்​பில் அந்​தப் பகுதி இடம்​பெற்​றுள்​ளது. இதில் நீதிமன்றங்களில் படிநிலை, நீதிக்​கான நடை​முறை​களைத் தாண்டி, நீதித்​துறை​யில் ஊழல் மற்​றும் லட்​சக்​கணக்​கான வழக்குகள் நிலுவை​யில் உள்​ளது குறித்து விளக்​கப்​பட்​டுள்​ளது.

          

தவிர, ”நீ​தித்​துறை​யில் ஊழல் நடை​பெறும் சம்​பவங்​கள் பொதுமக்களின் நம்​பிக்​கை​யில் பாதிப்பை ஏற்​படுத்​தும்’’ என்று உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி பி.ஆர்​.க​வாய் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் தெரி​வித்த கருத்​தும் என்​சிஇஆர்டி 8-ம் வகுப்பு பாடத்​தில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல் உச்ச நீதி​மன்​றத்​தில் நேற்று இந்த விவ​காரம் குறித்து புகார் எழுப்​பி​னார்.

அதற்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறிய​தாவது: “நீதித்​துறை உட்பட எந்த அமைப்​புக்​கும் களங்​கம் ஏற்​படுத்​து​வதை அனுமதிக்க முடி​யாது. இந்த விவ​காரத்​தில் சட்​டம் தன் கடமையை செய்​யும். நீதித்​துறை​யின் தலை​வர் என்ற முறை​யில் என் கடமையை நான் செய்​துள்​ளேன். இது திட்​ட​மிட்ட செய​லாக உள்ளது. இதற்கு மேல் நான் ஒன்​றும் சொல்​வதற்​கில்​லை.

இது குறித்து தானாகவே முன்​வந்து நடவடிக்கை எடுக்​கப்​படும். ஒன்​றிரண்டு நாட்​கள் பொறுத்​திருங்​கள். என்​சிஇஆர்​டி-​யின் பாடத்தால் நாட்​டின் அனைத்து உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் கலங்கி போயுள்​ளனர். இவ்​வாறு தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறி​னார்.

முன்​ன​தாக நாடாளு​மன்​றத்​தில் உறுப்​பினர் எழுப்​பிய கேள்விக்கு மத்​திய சட்​டத் துறை அமைச்​சகம் வெளி​யிட்ட பதிலில், ”கடந்த 2016ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையி​லான கால கட்​டத்​தில் உச்ச நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்​றங்​களில் பதவி​யில் உள்ள நீதிப​தி​களுக்கு எதி​ராக 7,528 புகார்​கள் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யிடம் அளிக்​கப்​பட்​டுள்​ளன” என்று தெரி​வித்​தது. இதற்​குப் பிறகு​ தான் இந்த விவ​காரம் பெரி​தாகி உள்​ளது குறிப்பிடத்தக்கது.

கருத்​துகள் நீக்​கம்: இதற்​கிடை​யில், என்​சிஇஆர்டி 8-ம் வகுப்பு பாடப்​புத்​தகத்​தில் நீதித்​துறை பற்றி உள்ள சர்ச்​சைக்​குரிய கருத்துகள் நீக்​கப்​படும் என்று மத்​திய அரசு உயர் அதி​கார வட்டாரங்​கள் நேற்று தெரி​வித்​தன.

இதுகுறித்து அதி​காரி​கள் கூறும்​போது, ”நீ​தித்​துறை பற்றி என்​சிஇஆர்டி புத்​தகத்​தில் சர்ச்சைக்​குரிய கருத்​துகளை எழு​தி​யிருக்க கூடாது. சில கருத்துகளை கூறு​வது தேவை​யில்​லாதது” என்று தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT