இந்தியா

சர்ச்சைக்குரிய போஜ்சாலா வளாகம் சரஸ்வதி தேவிக்கான கோயில்தான்: மத்திய பிரதேச உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு

செய்திப்பிரிவு

போபால்: மத்​திய பிரதேசத்​தின் தார் மாவட்​டத்​தில் 11-ம் நூற்​றாண்​டில் கட்​டப்​பட்ட போஜ்சாலா வளாகம் உள்​ளது. இது சரஸ்​வதி தேவி கோயில் என்று இந்​துக்​கள் வாதிடு​கின்​றனர். அதேசம​யம் அது கமல் மவுலா மசூதி என்று முஸ்​லிம்​கள் நம்​பு​கின்​றனர். இதனால் ஏற்​பட்ட சர்ச்​சையை தொடர்ந்து அங்கு கடந்த 2003-ல் இந்​துக்​கள், முஸ்​லிம்​கள் ஆகிய இரு தரப்​பினரை​யும் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் வழிபட ஏஎஸ்ஐ அனு​மதி அளித்​தது.

இதுதொடர்பான வழக்கில் ம.பி. உயர் நீதி​மன்​ற நீதிப​தி​கள் விஜய் குமார் சுக்​லா, அலோக் அவஸ்தி ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்​தது. நீதிப​தி​கள் தங்​கள் தீர்ப்​பில் கூறியிருப்பதாவது: வரலாற்று இலக்​கி​யங்​களும் ஆவணங்​களும், சர்ச்​சைக்​குரிய பகு​தி​யின் இயல்பு - பார்​மர் வம்​சத்தை சேர்ந்த மன்​னர் போஜருடன் தொடர்​புடைய ஒரு சமஸ்​கிருத கற்​றல் மைய​மான போஜ​சாலை​யாகவே இருந்​ததை நிலை​நாட்​டு​கின்​றன.

மேலும் போஜர் காலத்​துடன் தொடர்​புடைய பல்​வேறு இலக்​கிய மற்​றும் கட்​டிடக்​கலை குறிப்​பு​கள், அங்கு சரஸ்​வதி தேவி கோயில் இருந்​ததை சுட்​டிக்​காட்​டு​கின்​றன. எனவே, அது சரஸ்வதி கோயில்தான். லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சரஸ்வதி தேவி சிலையை மீட்டு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மசூதி கட்டுவதற்கு வேறு நிலம் ஒதுக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பு குறித்து வழக்​கறிஞர் விஷ்ணு சங்​கர் ஜெயின் கூறுகை​யில், ‘‘ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க தீர்ப்பு வந்துள்ளது. இந்து தரப்​பினருக்கு வழிபடும் உரிமையை நீதி​மன்​றம் வழங்​கி​யுள்​ளது. இனிமேல், அங்கு இந்து வழி​பாடு மட்​டுமே நடை​பெறும்’’ என்​றார்.

இந்த தீர்ப்பை தொடர்ந்து தார் மாவட்​டத்​தில் காவல்​துறை பாது​காப்பை பலப்​படுத்​தி​யுள்​ளது. மக்​கள் அமைதி காக்க வேண்​டும், வதந்தி அல்​லது தவறான தகவல்​களை பரப்​புவதை தவிர்க்க வேண்​டும் என தார் மாவட்ட ஆட்​சி​யர்​ ராஜீவ்​ ரஞ்​சன்​ வேண்​டு​கோள்​ விடு​த்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT