இந்தியா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக சமூக வலைதளப் பதிவு: கேரள காங். நிர்வாகிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் குறித்து சமூக வலை​தளத்​தில் அவதூறான பதிவு வெளி​யிட்ட விவகாரத்தில், கேரள மாநிலக் காங்​கிரஸ் குழு​வின் நிர்வாகிகளுக்​கு உச்சநீதி​மன்​றம் நேற்று நீதி​மன்ற அவ​மதிப்பு நோட்​டீஸ் அனுப்​பியுள்​ளது.

இது​தொடர்​பான வழக்கு விசா​ரணை​யின்​போது நீதிப​தி​கள் அர​விந்த் குமார், விபுல் எம். பஞ்​சோலி அடங்​கிய அமர்வு கூறியதாவது: நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பு​களை விமர்​சிக்க சுதந்​திரம் உண்டு. ஆனால், பேச்சு சுதந்​திரம் என்​பது நீதி நிர்​வாகத்​தில் தலை​யிடுவதற்கோ அல்​லது அச்​சுறுத்​து​வதற்கோ ஆனகேடயமாக மாறக் கூடாது.

எவ்​வளவு பெரிய உயர்​ப​த​வி​யில் இருப்​பவ​ராக இருந்​தா​லும், நீதி​மன்​றத்​தின் அதி​காரத்​தைக் குறைக்க முயற்​சித்​தால் அது இரும்புக் கரம் கொண்டு ஒடுக்​கப்​படும். நீதித்​துறை​யின் அமைதியையும் பொறுமையையும் நிறு​வனத்​தின் பல​வீனமாக ஒருபோதும் தவறாகக் கருதி​விடக் கூடாது. இவ்​வாறு நீதிப​தி​கள் காட்​ட​மாகத் தெரி​வித்​தனர்.

விசா​ரணை​யின் போது, கேரள மாநிலக் காங்​கிரஸ் குழு சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர், “அந்​தப் பதிவு கட்சி நிர்​வாகி​களின் அனுமதி​யின்​றிப் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டது; பின்​னர் அது நீக்கப்​பட்டு நிபந்​தனையற்ற மன்​னிப்​பும் கேட்​கப்​பட்​டுள்​ளது” என்று தெரி​வித்​தார். அதற்​குப் பதிலளித்த நீதிபதி குமார், “இந்த மன்னிப்பு வெறும் பேனாவில் இருந்து வந்​ததா, இதயத்​தில் இருந்து வந்​ததா என்​பதை நீதி​மன்​றம் பரிசீலிக்​கும்” என்​றார்.

கடந்த அக்​டோபர் 12 அன்று கேரள காங்​கிரஸின் அதி​காரப்​பூர்வ எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிடப்​பட்ட பதிவு இணை​யத்​தில் பெரும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யதைத் தொடர்ந்து நீக்​கப்​பட்​டது. அப்​ப​திவை வெளி​யிட்​ட​வர் பொறுப்​பி​லிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகக் கட்சி அறி​வித்​தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT