அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று முடிவடைந்தது. இதன்பின் ராமர் கோயில் கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:
ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை எல் அண்ட் டி மற்றும் டாடா கன்சல்டன்சி நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இந்த நிறுவனங்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தங்கள் பணிகளை முடித்து விட்டு கோயில் வளாகத்தை விட்டு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானத்துக்கான பணம் செலுத்துதல் உட்பட அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் அனைத்துக்கும் 3 ஆண்டு உத்தரவாதம் வழங்கியுள்ளன. பராமரிப்பு பணிக்கான ஒரு சிறு குழு மட்டும் கோயில் வளாகத்தில் தங்கியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.