குவாஹாட்டி: அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹரிசரண் பூமிஜ் கூறியதாவது:
விமானப்படை முன்னாள் வீரர் ஒருவர் ராணுவம் தொடர்பாக ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பினருக்கு சமூக ஊடகம் மூலம் அனுப்பியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவரது செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சில தகவல்கள் பிறகு நீக்கப்பட்டுள்ளதால் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிஎன்எஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அந்த வீரர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.