குலாம் அகமது மிர்

 
இந்தியா

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்கு வங்க சட்​டப்பேர​வைக்கு ஏப்​ரல், மே மாதங்களில் தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இந்​நிலை​யில் மேற்கு வங்க சட்​டப் பேர​வைத் தேர்​தல் தொடர்​பாக ஆலோ​சனை நடத்​து​வதற்​காக டெல்​லி​யில் கட்​சித் தலை​வர் மல்லிகார்​ஜுன கார்கே தலை​மை​யில் கூட்​டம் நடை​பெற்​றது.

கூட்​டம் முடிந்த பின்​னர் கட்​சி​யின் மாநில பொறுப்​பாளர் குலாம் அகமது மிர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, “மேற்கு வங்க சட்டப் பேர​வைத் தேர்​தலில் 294 தொகுதியிலும் காங்​கிரஸ் கட்சி தனித்​துப் போட்​டி​யிட கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது” என்றார்.

          
SCROLL FOR NEXT