இந்தியா

ஊரக வேலை திட்டத்தை பாதுகாக்க 45 நாள் போராட்டம் தொடங்கியது காங்.

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மத்திய அரசு, வளர்ச்சியடைந்த பாரதம் - வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (விபி-ஜி ராம் ஜி) என மாற்றி உள்ளது. இதில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை காப்பாற்றுவதற்காக 45 நாள் போராட்டத்தை காங்கிரஸ் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்ட விதம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT