புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனியை கொன்றதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது நடுநிலையான கொள்கை அல்ல என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில், "நாட்டு நலனை கருத்தில் கொண்டு ஈரான் போர் விஷயத்தில், மத்திய அரசு அமைதியான நிலைப்பாடு என்ற யுக்தியை பின்பற்றியுள்ளது. ஆடம்பரமான வெற்று பேச்சுக்கள் நடைமுறைக்கு உதவாது. இந்த நிலைப்பாட்டால் நாம் யாரையும் பகைத்து கொள்ளும் நிலை ஏற்படாது. இருதரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த முடியும். இது பொறுப்பான நிர்வாகத்திறன்" என தெரிவித்துள்ளார்.