இந்தியா

காங்கிரஸ் தலைமையுடன் ஒத்த கருத்துடன் பயணம்: சசி தரூர் விளக்கம்

ராகுல், கார்கே உடன் சந்திப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​காங்​கிரஸ் தலை​மை​யுடன் ஒத்த கருத்​துடன் பயணம் செய்​கிறேன் என்று திரு​வனந்​த​புரம் எம்பி சசி தரூர் தெரிவித்​துள்​ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு அக்​டோபரில் காங்​கிரஸ் தலை​வர் பதவிக்கு உட்​கட்சி தேர்​தல் நடை​பெற்​றது. இதில் கட்சி தலைமையின் ஆதரவு பெற்ற மல்​லி​கார்​ஜுன கார்​கேவுக்கு எதிராக சசி தரூர் போட்​டி​யிட்டு தோல்வி அடைந்​தார். இதன் ​பிறகு காங்​கிரஸ் தலை​மைக்​கும் சசி தரூருக்​கும் இடையே விரிசல் அதி​கரித்து வந்​தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசையும் பாராட்டி வந்தார்.

          

இந்நிலையில் பட்​ஜெட் கூட்​டத் தொடர் குறித்து ஆலோ​சிக்க சோனியா காந்தி வீட்​டில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற காங்​கிரஸ் எம்​பிக்​கள் கூட்​டத்​தை​ சசி தரூர் புறக்​கணித்​தார். அவர் பாஜக​வில் இணைய இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகின.

இந்த சூழலில் நாடாளு​மன்ற வளாகத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கேவை திரு​வனந்​த​புரம் எம்பி சசி தரூர் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். இந்த சந்​திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்​தது.

இதன் ​பிறகு நிருபர்​களிடம் சசி தரூர் கூறும்​போது, “எல்​லாம் நன்றாக உள்​ளது. காங்​கிரஸ் தலை​மை​யுடன் ஒத்த கருத்​துடன் பயணம் செய்​கிறேன். நான் தற்​போது எம்​பி​யாக உள்​ளேன். நாடாளு​மன்ற விவ​காரங்​களில் மட்​டும் கவனம் செலுத்​துகிறேன். வேறு எந்த பதவிக்​கும் ஆசைப்​பட​வில்​லை. கேரள சட்டப்பேரவைத் தேர்​தலில் காங்​கிரஸுக்​காக வழக்​கம் ​போல பிரச்​சா​ரம் செய்​வேன்” என்று தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT