இந்தியா

எப்ஆர்சிஏ திருத்தம் வாபஸ் பெற காங்., இடதுசாரி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எப்ஆர்சிஏ) திருத்தங்கள் இந்தியாவின் சிவில் சமூகத்தின் மீதான தாக்குதல் ஆகும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களின் சமூக ஊடகக் கணக்குகள், இணையதளங்கள் மற்றும் வெளியீடுகளின் விவரங்களை வழங்குவது இனி அவசியமாகியுள்ளது. இது வெகுஜன கண்காணிப்பின் ஒரு பகுதி ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுபோல், மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு மார்க்சிஸ்ட் மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்துவது இறையாண்மை கொண்ட அரசின் நியாயமான செயல்பாடு என்றாலும், அது தொண்டு, கல்வி மற்றும் மத அடிப்படையிலான அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் ஒரு கருவியாக மாறக்கூடாது. இந்த திருத்தங்கள் தன்னார்வ அமைப்புகளையே ஒழுங்குபடுத்தும் நிலைக்குச் சென்றுள்ளன.

குறிப்பிட்ட வகை செயல்பாடுகளைப் பரிந்துரைப்பது, புவியியல் ரீதியாக செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது, அறிக்கை சமர்ப்பிக்கும் தேவைகளை விரிவுபடுத்துவது மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் என்பதற்கான வரையறையை விரிவுபடுத்துவது போன்றவை இதற்குச் சான்றாகும்’’ என்றார்.

SCROLL FOR NEXT