இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்த முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்​செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறியிருப்பதாவது: மக்​கள் தொகை கணக்​கெடுப்​பில் சாதி​வாரி கணக்​கெடுப்​பும் சேர்க்​கப்​படும் என்று மத்​திய அரசு கடந்த ஆண்டு அறி​வித்​தது. ஆனால் தற்​போது பிரதமர் நரேந்​திர மோடி ‘யு-டர்ன்' அடித்​திருக்​கிறார்.

கடந்த 2024 ஏப்​ரல் 28-ம் தேதி தனி​யார் தொலைக்​காட்​சிக்கு பிரதமர் நரேந்​திர மோடி அளித்த பேட்​டி​யில், “சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்த காங்​கிரஸ் கோரிக்கை விடுப்​பது, நக்​சல் சிந்​தனை​யின் அறிகுறி​யாகும்” என்று விமர்​சித்​தார். ஆனால் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்​ரல் 20-ம் தேதி பிரதமர் மோடி வெளி​யிட்ட அறி​விப்​பில் சாதி வாரி கணக்​கெடுப்பு நடத்​தப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த அறி​விப்பு வெளி​யாகி ஓராண்​டாகி​விட்​டது. ஆனால் இது குறித்த வழி​காட்டு நெறிகள் இன்​னும் வெளி​யிடப்​பட​வில்​லை. நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டத் தொடர் அண்​மை​யில் நடை​பெற்​றது. இதில் சாதி​வாரி கணக்​கெடுப்பை தாமதப்​படுத்​தும் பிரதமரின் நோக்​கம் மிகத் தெளி​வாகப் புரிந்​தது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT