இந்தியா

காவிரி, மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு

இரா.வினோத்

பெங்களூரு: காவிரி நதிநீர் பங்​கீடு, மேகேதாட்டு அணை விவகாரம் ஆகிய​வற்​றில் தமிழகத்​தைக் கண்​டித்​து, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடை​பெறும் என, கன்னட கூட்​டமைப்​பின் தலை​வர் வாட்​டாள் நாக​ராஜ் தெரிவித்​தார்.

இதுகுறித்​து, அவர் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் போதிய மழை பெய்​யாத​தால் காவிரி​யில் இங்​குள்ள விவ​சா​யிகளுக்கே தண்​ணீர் திறக்​கப்​பட​வில்​லை. ஆனால், காவிரி மேலாண்மை ஆணை​யம், தமிழகத்​துக்கு தண்​ணீர் விடு​மாறு கூறி​யுள்​ளது. கர்​நாடகா​வுக்கு அநீதி இழைக்​கும் இந்த உத்​தரவை கண்​டித்​தும், காவிரி விவகாரத்​தில் கர்​நாடகா​வுக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும் தமிழகத்தை எதிர்த்​தும், மேகே​தாட்​டு​வில் அணை​கட்ட அனுமதிக்கக் கோரி​யும் நாளை (இன்​று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கன்னட கூட்​டமைப்​பின் சார்​பில் முழு அடைப்பு போராட்​டம் நடத்​தப்​படும்.

இதனால், பள்​ளி, கல்​லூரி​கள், தனி​யார் நிறு​வனங்​கள், வணிக வளாகங்​கள், கடைகள், ஆட்​டோ, வாடகை கார், பேருந்​துகள் ஆகியவை இயங்​காது. அனை​வரும் தாமாக முன்​வந்து இந்த போராட்​டத்​தில் பங்​கேற்க வேண்​டும். எனது தலை​மை​யில் இரு மாநில எல்​லை​யான‌ அத்​திப்​பள்​ளி​யிலும், சுதந்​திர பூங்​கா​விலும் போராட்​டம் நடை​பெறும். இதில் கன்னட ஆதர​வாளர்​கள், விவசாய அமைப்​பு​கள் பங்​கேற்க வேண்​டும்​. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

இயல்பு நிலை பாதிக்​கப்​ப​டாது?

போராட்​டத்தை கைவிடு​மாறு கர்​நாடக முதல்​வர் டிகே சிவகு​மார் கோரிக்கை விடுத்​துள்​ளார். இதை மீறி முழு அடைப்பு போராட்​டம் நடத்​தி​னால் அதற்கு மக்​களின் ஆதரவு கிடைக்​காது என டி.கே.சிவகு​மார் தெரி​வித்​துள்​ளார். இதையடுத்​து, வாட்​டாள் நாக​ராஜுக்கு ஆதரவு தெரி​வித்த கன்னட ரக் ஷன வேதி​கே, கர்​நாடக தனி​யார் பள்​ளி, கல்​லூரி​கள் கூட்​டமைப்​பு, தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம், ஆட்டோ ஓட்​டுநர்​கள் சங்​கம் உள்ளிட்டவை தங்​களது முடிவை மாற்றி கொண்​டுள்​ளன.

அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்க மாட்​டோம் என வெளிப்​படை​யாக அறி​வித்​துள்​ளனர். இதனால், இன்று நடை​பெறும் முழு அடைப்பு போராட்​டத்​தால் கர்​நாட​கா​வில் இயல்பு வாழ்க்கை பா​திக்​கப்​ப​டாது என தெரி​கிறது. அதேவேளை​யில், கர்​நாட​கா, தமிழகம் இடையே போக்​கு​வரத்​து பா​திக்​கப்​பட வாய்ப்​பு இருக்கிறது.

தமிழகத்துக்கு நீர் திறக்க மறுப்பு

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதைக் கண்டித்து பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் 2-வது நாளாக நேற்றும் கன்னட அமைப்பினர், விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டியாவில் விவசாய சங்கத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுடன் நேற்று காலையில் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்துக்குப்பின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், ''கர்நாடக அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். எங்களது தரப்பு நியாயத்தை உச்ச நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். காவிரி மேலாண்மை ஆணையத்திலும் மீளாய்வு செய்ய கோரி இருக்கிறோம். சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து ஓரிரு நாட்களில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்'' என்றார்.

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மாற்றம்: இந்நிலையில் ராமலிங்க ரெட்டி வகித்து வந்த நீர்ப்பாசனத்துறை, மண்டியாவை சேர்ந்த செலுவராயசாமி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT