இந்தியா

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த புகார்: அரசியல் உள்நோக்கம் கொண்டது - டெல்லி நீதிமன்றத்தில் சோனியா காந்தி பதில்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்த்​தது தொடர்​பான புகார், அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டது என்று டெல்லி நீதி​மன்​றத்​தில் சோனியா காந்தி பதில் அளித்​துள்​ளார்.

காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் சோனியா காந்​தி, இந்​திய குடி​யுரிமை பெறு​வதற்கு முன்பே தனது பெயரை முறை​கே​டாக வாக்​காளர் பட்​டியலில் சேர்த்​த​தாகக் கூறி, வழக்​கறிஞர் விகாஸ் திரி​பாதி தாக்​கல் செய்த மனுவை டெல்லி மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றம் கடந்த ஆண்டு செப்​டம்​பர் மாதம் தள்​ளு​படி செய்​தது.

          

இதை எதிர்த்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதி​மன்​றத்​தில் திரி​பாதி சீராய்வு மனு தாக்​கல் செய்​திருந்​தார். அந்த மனுவுக்கு பதில் அளிக்​கு​மாறு சோனியா காந்​திக்கு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதன்​படி, சோனியா காந்தி தாக்​கல் செய்த பதில் மனு​வில், “வாக்​காளர் பட்​டியலில் எனது பெயர் முறை​கே​டாக சேர்க்​கப்​படிருப்​ப​தாகக் கூறு​வது தவறானது. இந்​தப் புகார் அடிப்​படை ஆதா​ரமற்​றது. அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டது மற்​றும் தவறாக வழிநடத்​து​வது’’ என்​று கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT