இந்தியா

நோ​யாளி​களிடம் மனிதாபிமானம் அவசியம்: குடியரசு துணை தலைவர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

விஜய​வாடா: ஆந்​திர மாநிலம் விஜய​வா​டா​வில் உள்ள என்​.டி.ஆர். சுகா​தார பல்​கலைக்கழகத்​தின் 40-வது ஆண்டு விழா​வில் குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார்.

அப்​போது, விழா​வில் அவர் பேசி​ய​தாவது: மருத்​துவ கல்விக்கு என்.டி.ஆர். அளித்த பங்கு மறக்க முடி​யாதது. நாட்​டிலேயே முதல் சுகா​தார பல்​கலைக்​கழகம் இங்​கு​தான் உள்​ளது. தெலுங்கு கங்கை திட்​டம் மூலம் என்​.டி.​ரா​மா​ராவ் சென்​னைக்கு குடிநீர் வழங்​கும் திட்​டத்தை அமல்​படுத்​தி​னார். அவர் இது​போன்று பல மனி​தாபி​மான செயல்​களில் ஈடு​பட்​டுள்​ளார்.

விக்​சித் பாரத்​-2047 திட்​டத்​தின் கீழ், பிரதமர் மோடி​யின் ஆட்​சி​யில் கடந்த 12 ஆண்​டு​களில் மருத்​துவ கல்​லூரி​கள் நம் நாட்​டில் அதிகரித்​துள்​ளன. இந்த என்​.டி.ஆர். பல்​கலைக்கழகத்​தில் இருந்து நோபல் பரிசு வெல்​லும் மாணவர்​கள் பலர் உரு​வாக வேண்​டும். சர்​வ​தேச அளவில் மருத்​துவ பரிசோதனை​களை செய்து சாதனை புரிய வேண்​டும். புற்​று​நோய் போன்ற கடும் நோய்​களுக்கு சரியான மருந்​துகளை கண்​டறிய வேண்​டிய அவசி​யம் உள்​ளது.

மருத்​துவ துறை​யில் ஏஐ, டிஜிட்​டல் மருத்​து​வம் போன்றவைகளுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் நாம் வல்​லுனர்​களாக திகழ​வேண்​டும். நவீன தொழில்நுட்பம் அதி​கரித்​தா​லும், நாம் மனி​தாபி​மானத்தை கைவிட கூடாது. நோயாளி​களிடம் நாம் கருணை​யுடன் நடந்து கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

திருமலையில் சுவாமி தரிசனம்: முன்னதாக, சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று காலை விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். அவரை ஆந்திர அமைச்சர் சத்யபிரசாத், திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர் உட்பட பலர் வரவேற்றனர்.

பின்னர் அவர் திருமலைக்கு சென்றார். அதன் பின்​னர் நேற்று மாலை ஏழு​மலை​யானை குடியரசு துணை தலை​வர் சி.பி. ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்​தார். முன்​ன​தாக, அவர் பேடி ஆஞ்​சநேயரை தரிசித்​தார். அவருக்கு ரங்​க​நாயக மண்​டபத்​தில் தீர்த்​த பிரசாதங்கள்​ வழங்​கி கவுரவிக்​கப்​பட்​டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT