இந்தியா

உ.பி. மதரஸா வாரியத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கவுரவிக்கிறார் முதல்வர் யோகி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: கடந்த 2017-ல் உத்​தர பிரதேசத்​தில் பாஜக ஆட்சி அமைந்​தது முதல் மதரஸாக்​களில் பல்​வேறு வளர்ச்​சிப் பணிகளை அரசு செய்து வரு​கிறது. மதரஸா கல்​வியை நவீனமாகவும் உயர்​தர​மாக​வும் பயனுள்​ள​தாக​வும் மாற்ற வேண்டும் என்​பது முதல்​வர் யோகி அரசின் நோக்​க​மாக உள்​ளது.

இந்​நிலை​யில் இந்த ஆண்டு மதரஸா வகுப்​பு​களில் இடை நிலையான முன்ஷி மற்​றும் மவுல்வி மேல்​நிலை​யான ஆலிம் ஆகிய தேர்​வு​களில் முதல் 10 இடங்​களைப் பிடித்த மாணவர்​கள் லக்​னோவுக்கு அழைக்​கப்​பட்டு முதல்​வர் யோகி​யால் கவுரவிக்கப்பட உள்​ளனர். இவர்​களில், ஒவ்​வொரு பிரி​விலும் முதல் 3 இடங்​களைப் பிடித்த மாணவர்​களுக்கு ‘டேப்​லெட்' கணினி பரிசாக அளிக்​கப்பட உள்​ளது.

2025- 26 கல்வி ஆண்​டுக்​கான உ.பி. அரசின் மதரஸா வாரி​யத் தேர்​வு​கள், கடந்த பிப்​ர​வரி 9 முதல் 14 வரை நடை​பெற்​றன. வெளிப்​படைத்​ தன்​மையை உறுதி செய்​ய​வும், முறை​கேடு​களை தடுக்​க​வும், தேர்வு மையங்​களில் சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்தி கண்​காணிக்​கப்​பட்​டது. பதிவு செய்​திருந்த 80,933 மாணவர்​களில் 63,211 பேர் தேர்வு எழு​தினர். அவர்​களில் 55,788 மாணவர்​கள் தேர்ச்சி பெற்​றனர்.

மாநில சிறு​பான்​மை​யினர் நலத்துறை அமைச்​சர் தானிஷ் ஆசாத் அன்​சாரி கூறுகை​யில், “தர​மான கல்​வியை வழங்​கு​வ​தில் யோகி அரசு தொடர்ந்து பணி​யாற்றி வரு​கிறது. பொருளா​தார ரீதி​யாகப் பின்​ தங்​கிய முஸ்​லிம் குடும்​பங்​களைச் சேர்ந்த குழந்​தைகள் இக்கல்வி நிறு​வனங்​களில் பயில்​வ​தால், மதரஸா கல்வி என்​பது வெறும் சம்​பிர​தாய​மாக மட்​டுமே நின்​று​விடக் கூடாது. அத்தகைய மாணவர்​களுக்​குச் சிறந்த மற்​றும் நவீனக் கல்வி வழங்கப்பட வேண்​டும். இது அவர்​களின் அடிப்​படை உரிமை" என்றார்.

சிறு​பான்​மைச் சமூகங்​களைச் சேர்ந்த மாணவர்​கள் நவீனக் கல்வி பெறு​வதை பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்திய அரசும் உறு​தி​ செய்​யக் கோரி வரு​கிறது. இது தொடர்​பாக பிரதமர் மோடி, 'ஒரு கையில் குர்​ஆனும், மறு கையில் கணினி​யும்' என்ற தொலை நோக்​குப் பார்​வைக்கு செயல்​ வடிவம் கொடுக்க வேண்​டு​கோள் விடுத்​தது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT