இந்தியா

கர்நாடகாவில் ஜனநாயகன் திரைப்படம் நிறுத்தம்

செய்திப்பிரிவு

பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னட அமைப்பினர் தமிழக முதல்வர் விஜய் நடித்து வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெங்களூரு, மண்டியா ஆகிய இடங்களில் ஜனநாயகன் திரையிடப்பட்ட திரையரங்குகளை முற்றுகையிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தனர்.

கன்னட அமைப்பினரின் மிரட்டல் காரணமாக கர்நாடகா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட திரையரங்கங்களில் ஓடிக் கொண்டிருந்த ஜனநாயகன் படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT