இந்தியா

டெல்லி பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரிழப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யின் கிருஷ்ணா நகர் பகுதி​யில் சர்​வோதயா கன்யா வித்​யாலயா ​பள்​ளி​யில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒரு​வர் நேற்று தனது உடலில் பெட்​ரோலை ஊற்​றிக்​கொண்டு தீ வைத்து தற்​கொலை செய்து கொண்​டார்.

பள்​ளி​யின் காவலர் அறைக்​குப் பின்​னால் எரிந்த நிலை​யில் மாணவி​யின் உடல் கண்​டெடுக்​கப்​பட்​டது. மாணவி​யின் பள்​ளிப் பையில் இருந்து 3 கடிதங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. இந்த தற்​கொலை சம்​பவத்​தில் காதல் விவகாரம் தொடர்​புடைய​தாக இருக்​கலாம் என விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT