இந்தியா

10-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: பள்ளி முன் பெற்றோர் போராட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் 10-ம் வகுப்பு மாணவர் ஒரு​வரின் தற்​கொலை தொடர்​பாக அப்​பள்ளி முன்பு பெற்​றோர்​ நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

டெல்லி அசோகா பிளேஸ் பகு​தி​யில் செயின்ட் கொலம்பா பள்ளி உள்​ளது. இப்​பள்​ளி​யில் 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவர் ஒரு​வர் கடந்த செவ்​வாய்க்​கிழமை பிற்​பகல் டெல்லி ராஜேந்​திர பிளேஸ் மெட்ரோ நிலைய நடைமேடை​யில் இருந்து கீழே குதித்து தற்​கொலை செய்து கொண்​டார்.

அவர் தனது நோட்​டுப் புத்​தகத்​தில் இந்த தற்​கொலைக்கு காரண​மாக ஆசிரியர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று கூறி​யிருந்​தார். மேலும் அந்த நோட்டு புத்தகத்தில், “அம்மா... என்னை மன்னித்து விடுங்கள்” என்று எழுதியுள்ளார்.

இது தொடர்​பாக மாணவரின் தந்தை அளித்த போலீஸ் புகாரில், “சிறிய விஷ​யங்​களுக்கு சில ஆசிரியர்​கள் தன்னை திட்​டு​வ​தாக​வும் அவமானப்​படுத்​து​வ​தாக​வும் எனது மகன் என்​னிடம் பலமுறை புகார் கூறி​யுள்​ளார். இதனை பள்ளி அதி​காரி​களின் கவனத்​துக்கு கொண்டு சென்ற பிறகும் ஆசிரியர்​கள் நடத்​தை​யில் எந்த மாற்​ற​மும் இல்​லை”என்று கூறி​யுள்​ளார்.

இந்​நிலை​யில் செயின்ட் கொலம்பா பள்ளி முன்​பாக பெற்​றோர்​ உள்​ளிட்ட ஏராள​மானோர் நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். ஆசிரியர்​கள் மற்​றும் பள்ளி நிர்​வாகம் மீது நடவடிக்கை எடுக்​க வலி​யுறுத்​தினர்​.

SCROLL FOR NEXT