இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு முதல்... அமைச்சர் ராஜினாமா வரை...

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் கரப்​பான் பூச்சி கட்சி சார்​பில் மேற்​கொள்​ளப்​பட்ட போராட்​டம் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானின் ராஜி​னா​மா​வில் முடிந்​தது.

ஆம் ஆத்மி கட்​சி​யின் தொண்​ட​ராக பணி​யாற்றி அமெரிக்​கா​வில் முது​நிலை பட்​டப்​படிப்பு படிக்​கும் அபிஜித் திப்கே என்​பவர் கடந்த மே மாதம் கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற பெயரில் இணையதளத்​தை​யும், சமூக வலை​தளப் பக்​கத்​தை​யும் தொடங்​கி​னார்.

இவர் நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்தை கையில் எடுத்​தார். முறை​கேட்​டுக்​குப் பொறுப்​பேற்று மத்​தி​யக் கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தனது பதவியை ராஜி​னாமா செய்ய வேண்​டும் என்ற கோரிக்​கை​யுடன் இந்த அமைப்பு டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராட்​டத்தை தொடங்​கியது. இதில் சமூக சேவகர் சோனம் வாங்​சுக் இணைந்து உண்​ணா​விரதம் இருந்​தார்.

இந்​தப் போராட்​டத்​துக்கு எதிர்க்​கட்​சி​யினரும், மாணவர்​களும் ஆதரவு அளித்​த​தால் இது மிகப் பெரிய போராட்​ட​மாக மாறியது. இதையடுத்து கரப்​பான் பூச்சி கட்​சி​யினருடன் அரசு பேச்​சு​வார்த்தை நடத்தி அவர்​களின் கோரிக்​கையை ஏற்​றுக் கொண்டது.

இதன் முடி​வாக மத்​தி​யக் கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். இந்த விவ​காரத்​தில் கடந்த 3 மாதங்​களாக நடை​பெற்ற சம்​பவங்​களின் விவரம்:

>> மே 3: நீட் இளநிலை தேர்வு நடத்​தப்​பட்​டது. 22 லட்​சம் மாணவர்​கள் பங்​கேற்​றனர்.

>> மே 12: வினாத்​தாள் கசிந்​த​தாக எழுந்த புகார்​களைத் தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டது.

>> மே 16: அபிஜித் திப்கே என்ற இளைஞர் கரப்​பான் பூச்சி கட்சி (சிஜேபி) என்ற பெயரில் இணை​யதளத்தை தொடங்​கி​னார்.

>> ஜூன் 2: நீட் வினாத்​தாள் கசிவுக்கு எதி​ராக முக்​கிய நகரங்​களில் மாணவர்​கள் ஆர்ப்​பாட்​டம் செய்​தனர்.

>> ஜூன் 6: சிஜேபி போராட்​டத்​துக்​குத் தலைமை தாங்​கு​வதற்​காக அபிஜித் திப்கே அமெரிக்​கா​வில் இருந்து இந்​தியா திரும்​பி​னார்.

>> ஜூன் 11: தேர்வு சீர்​திருத்​தங்​கள் மற்​றும் மாணவர்​களுக்கு நிவாரணம் கோரி சிஜேபி 5 அம்ச அறிக்​கையை வெளி​யிட்​டது.

>> ஜூன் 20: ஜந்​தர் மந்​தரில் சிஜேபி கால​வரையற்ற போராட்டத்தைத் தொடங்​கியது.

>> ஜூன் 28: சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக் ஜந்​தர் மந்​தரில் தனது உண்​ணா​விரதப் போராட்​டத்​தைத் தொடங்​கி​னார்.

>> ஜூலை 18: டெல்லி காவல் துறை சோனம் வாங்​சுக்கை ஜந்​தர் மந்​தரில் இருந்து அப்​புறப்​படுத்தி மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தது.

>> ஜூலை 20: சிஜேபி கட்​சி​யினர் நாடாளு​மன்​றம் நோக்கி பேரணி சென்​றனர். போராட்​டக்​காரர்​கள் கல்​வீச்​சில் ஈடு​பட்​டனர். போலீஸ் வாக​னங்​களை நொறுக்​கின்​றனர். அவர்​கள் மீது போலீ​ஸார் தடியடி நடத்தி கண்​ணீர்ப் புகை குண்​டு​களை வீசினர். இதனால் போராட்​டம் தீவிரம் அடைந்​தது.

>> ஜூலை 20 முதல் ஜூலை 24 வரை: மத்​தி​யக் கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானின் ராஜி​னா​மாவை வலி​யுறுத்தி எதிர்க்​கட்​சிகள் நாடாளு​மன்​றத்தை முடக்​கின.

>> ஜூலை 21: ராகுல் தலை​மை​யில் காங். எம்​.பி.க்​கள் பிரதமர் இல்​லத்​துக்கு வெளியே போராட்​டம் நடத்​தினர்.

>> ஜூலை 23: வினாத்​தாள் கசிவு வழக்​கு​களை விசா​ரிக்க விரைவு நீதி​மன்​றங்​கள் அமைக்​கப்​படும் என்று பிரதமர் மோடி அறி​வித்​தார்.

>> ஜூலை 24: மத்​திய அரசின் உறு​தி​யைத் தொடர்ந்து சோனம் வாங்​சுக் தனது உண்​ணா​விரதப் போராட்​டத்தை முடித்​துக் கொண்​டார்.

>> ஜூலை 24: மத்​திய அரசு - சிஜேபி இடையே 2-ம் கட்ட பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. அவர்​களின் முக்​கிய கோரிக்​கைகளை ஏற்​ப​தாக அரசு உறு​தி​யளித்​தது.

>> ஜூலை 25: கல்வி அமைச்​சர் பத​வியைத் தர்​மேந்​திர பிர​தான்​ ராஜி​னா​மா செய்​தார்​. போ​ராட்​டம்​ வாபஸ்​ பெறப்​பட்​டது.

SCROLL FOR NEXT