இந்தியா

சிறார்கள் இணையத்தை பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இணை​யத்​தைப் பயன்​படுத்​து​வது 18 வயதுக்​குட்​பட்ட சிறார்​களின் அடிப்​படை உரிமை என்று உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்து உள்​ளது.

டெல்​லியை சேர்ந்த ஜஸ்ட் ரைட்ஸ் பார் சில்ட்​ரன் அலை​யன்ஸ் என்ற தன்​னார்வ தொண்டு நிறு​வனம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. அதில், “18 வயதுக்கு உட்​பட்ட சிறார் சமூக வலை​தளங்​களைப் பயன்​படுத்த கட்​டுப்​பாடு விதிக்க வேண்​டும். பெற்​றோரின் மேற்​பார்​வை​யின் கீழ் அவர்​கள் சமூக வலை​தளங்​களை பார்​வை​யிட அனு​ம​திக்​கலாம். இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் உரிய உத்​தர​வு​களைப் பிறப்​பிக்க வேண்​டும்" என்று கோரப்​பட்​டது.

இந்த வழக்கு தொடர்​பாக தன்​னார்வ தொண்டு அமைப்பு மற்​றும் மத்​திய அரசு சார்​பில் விரி​வான வாதங்​கள் முன்​வைக்​கப்​பட்​டன. அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.பி. பர்​தி​வாலா, கே.​வினோத் சந்​திரன் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்​கியது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டம் 21-வது பிரி​வின் கீழ் ஒவ்​வொரு தனி​நபருக்​கும் இணை​யத்​தைப் பயன்​படுத்​தும் உரிமை உள்​ளது. இது அடிப்​படை உரிமை ஆகும். சிறார்களுக்​கும் இந்த உரிமை உண்​டு.

வயது வித்​தி​யாசம் இன்றி அனைத்து சிறார்களும் இணை​யத்​தைப் பயன்​படுத்​தலாம். இது அவர்​களின் அடிப்​படை உரிமை ஆகும். இணை​யத்​தில் ஏற்​படும் ஆபத்​துகளைக் காரணம் காட்டி குழந்​தைகளுக்​கான இணைய உரிமையை மறுக்க முடி​யாது. இந்த விவ​காரம் தொடர்​பாக கடந்த 2024-ம் ஆண்​டில் உச்ச நீதி​மன்​றம் முக்​கிய தீர்ப்​பினை வழங்கி உள்​ளது. இதனை சமூக வலைதள நிர்​வாகங்​கள் முறை​யாகப் பின்​பற்​ற​வில்​லை.

இதுதொடர்​பாக மத்​திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். சிறார் பாலியல் வன்​கொடுமை சார்ந்த புகைப்​படங்​கள், வீடியோக்​களை இணை​யதளங்​களில் இருந்து நீக்க மத்​திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும். இதில் தொடர்​புடைய​வர்​களுக்கு கடுமை​யான அபராதம், தண்​டனை​களை விதிக்க வேண்​டும். நமது சிறார்களைப் பாது​காக்க வேண்​டும். அதே​நேரம் அவர்​களின் உரிமை​களை​யும் உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு தீர்ப்​பில் தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT