இந்தியா

சபரிமலை வழக்கில் கைதான தந்திரி மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் துவார பால​கர் சிலைகள், கரு​வறை கதவுகளில் பூசப்பட்டிருந்த 4.5 கிலோ தங்​கம் திருடப்​பட்​டிருப்​பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்​பாக ஐயப்​பன் கோயில் முன்​னாள் அர்ச்​சகர் உன்​னிகிருஷ்ணன் போத்​தி, தேவசம் போர்டு முன்​னாள் தலை​வர் பத்​மகு​மார் உட்பட 10 பேர் கைது செய்​யப்​பட்டனர்.

இதன் தொடர்ச்​சி​யாக ஐயப்​பன் கோயில் தந்​திரி கண்​டரரு ராஜீவரு நேற்று முன்​தினம் கைது செய்​யப்​பட்​டார். நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தப்​பட்ட அவர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். அவருக்கு நேற்று காலை நெஞ்சு வலி ஏற்​பட்​டதால் திரு​வனந்​த​புரம் மருத்​து​வ​மனை​யின் அவசர சிகிச்​சைப் பிரி​வில் அவர் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

SCROLL FOR NEXT