கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தாக்கூர் நகரில் 'சர்வதேச மத்துவா கோசாய் மாநாடு' நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் சுவேந்து அதிகாரி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இதுவரை 25,000 பேருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் விசாரணையை விரைவுபடுத்தி, டிசம்பர் 31-க்குள் 2.5 லட்சம் மனுதாரர்களுக்கு குடியுரிமை வழங்குவோம். மேலும், இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறும் தகுதியுள்ள பட்டியல் சாதி விண்ணப்பதாரர்களுக்கு பட்டியல் சாதி சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மற்ற எல்லா மாநில முதல்வர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தினர். இதன் மூலம் தகுதியுள்ளவர்கள் குடியுரிமை பெற்றனர். மம்தா பானர்ஜி மட்டுமே அதை எதிர்த்தார். எங்கள் அரசு சார்பில் மத்துவா சமூகத்தின் வளர்ச்சிக்காக ரூ.50 கோடி மானியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.